Breaking News

ஏப்.25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் : அனைத்துத்துறை ஊழியர்கள் முடிவு


மதுரைபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவலியுறுத்திஏப்., 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்
ஈடுபடதமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின்போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.இதன் மாநில அமைப்பாளர்சுப்பிரமணியன் கூறியதாவதுமறைந்த முதல்வர் ஜெயலலிதாசட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டம்அமல்படுத்தப்படும் என்றார்.


இதற்காக வல்லுநர் குழுவையும் அமைத்தார்ஆனால் இக்குழுஅறிக்கை வழங்குவதில் கால தாமதமாகிறதுஎனவே புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துபழைய திட்டத்தை விரைந்து அமல்படுத்தவேண்டும்மேலும் 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணமாக 20சதவீதம் வழங்க வேண்டும்சிறப்பு காலமுறை சம்பளத்தை ஒழித்து,வரையறுக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.தொகுப்பூதியம்மதிப்பூதியம்தினக்கூலிஅவுட்சோர்சிங்முறையில் அனைத்து துறைகளில் நடக்கும் பணி நியமனங்களை ரத்துசெய்ய வேண்டும்காலி பணியிடங்களில் காலமுறை சம்பளத்தில்ஊழியர்களை நியமிக்க வேண்டும்சாலை பணியாளர்களுக்கு, 41 மாதபணிக்காலத்தை அறிவிக்க வேண்டும்நீண்ட காலமாகவலியுறுத்தப்படும்இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15 மாவட்டதலைநகரங்களில் பேரணிஏப்., 8 ல் மாவட்டங்களில் வேலை நிறுத்தஆயத்த மாநாடுஏப்., 15 ல் திருச்சியில் மாநில அளவில் வேலைநிறுத்த மாநாடு, 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கும். 64 துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில்ஈடுபடுகின்றனர்என்றார்.