Breaking News

பொதுத்தேர்வு 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த தேர்வுத்துறையின் அறிவுரை

 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் , மார்ச் / ஏப்ரல் 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளின்போது மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்ற அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

குரூப் - 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்பட 9,870 காலிப் பணியிடங்களுக்கு குரூப் - 4 தேர்வு நடைபெற்றது. முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தேர்வர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனிடையே, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ட்விட்டரில் தேர்வர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட மாணவி பலி - தலைமையாசிரியர் உட்பட இருவர் சஸ்பெண்ட்!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நகராட்சி பள்ளி ஒன்றில் சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட மாணவி கல்லீரல் பாதிப்புக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தலைமையாசிரியர் உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.