Breaking News

5 வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர்: ரோட்டில் திரியும் மாணவர்கள்


வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையம் துவக்கப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் ஒரு ஆசிரியரே உள்ளதால், மாணவர்கள் வகுப்பில் அமராமல் தெருக்களில் திரிகின்றனர்.
இப்பள்ளியில் தலைமை மற்றும் உதவி ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்தனர். உதவி ஆசிரியை கடந்த ஜூனில் இடமாறுதலில் சென்றார். அதன் பின் 5 மாதங்களுக்கு மேலாகியும் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. தலைமை ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். ஒரு வகுப்பில் பாடம் நடத்தினால் மற்ற வகுப்பு மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறிவிடுகின்றனர். கட்டுப்பாடின்றி கடைத் தெருக்களில் அலைந்து திரிகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பதுடன் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம்

மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க, ஒடிசா அரசு, புதிய வியூகத்தை இன்று முதல் செயல்படுத்த உள்ளது.

இதுகுறித்து, அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் திபி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது: இதன்படி, ஒரு மாணவர், 7 நாட்கள் வரையில் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின்
இருப்பிடங்களுக்கு சென்று, அவர்களுடன் கலந்துரையாடி,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


ஜனவரி(2015) மாத நாட்குறிப்பு


JAN DIARY 2015

>1.1.15- Global Formal Day
>2.1.15-School Reopens
>3.1.15-Grievance Day/Primary CRC
>5.1.15- Arudhra Darisanam (RL)
>5,12,19,27.1.15- British Council 4Days English Training for Primary TRs

>6-8.1.15- Upper Primary BRC Training  (Science)
>14.1.15- Bhogi (RL)
>15.1.15- Thai Pongal/ National Army Day
>16.1.15- Thiruvalluvar Day/Mattu Pongal
>17.1.15- Uzhavar Thirunal
>23.1.15- Netaji's Subash Chandra Bose Birth Anniversary
>24.1.15- Upper Primary CRC/National Girl Child Day
>25.1.15- National Voter's Day
>26.1.15- Republic Day
>30.1.15- National Martyr's Day


குறிப்பு; பயிற்சி வகுப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டது

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு !


நேற்று நடந்த கவுன்சிலிங்கில் முறைகேடு ஆசிரியர்கள் போராட்டம்


மாணவியர் அதிகம் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்

கர்நாடகா மாநிலத்தில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கும் அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.


மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, 60 கோடி ரூபாய் வழங்கும்படி, கல்வித் துறை, கர்நாடகா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கையை ஏற்ற அரசு, முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த பணத்தில், பெங்களூருவின் 250 பள்ளிகளிலும், மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில், 300 அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் கடந்து வந்த பாதை நினைவுகளாய் - சுவடுகள் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு
உள்ளது. இதில் உறுப்பினர் செயலராக, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் எஸ்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். மையம் அமைப்பது, வினாத்தாள், விடைத்தாள்களை கொண்டு சேர்ப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வர். இத்தேர்வில், முதன்முறையாக தேர்வர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


கடிதம்:


அனைவருக்கும் கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, சமீபத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், மாணவர்கள் குறித்த தகவல்கள், ஆதார் எண் பதிவு செய்தல் குறித்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இதுகுறித்த உத்தரவுகள், சம்பந்தப்பட்ட இயக்குனர் அலுவலகங்களில் இருந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைப்பு சந்தாவினை 30/01/2015 குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு



2014-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது - பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துகளை அனுப்புதல் மற்றும் மாவட்ட தேர்வுக் குழு அமைத்தல்



இருபாலர் மேனிலைப்பள்ளிகளிலிருந்து 2014-2015ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 20 அரசு பெண்கள் மே.நி.பள்ளிகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை

ஜனவரி 25 திருச்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் -த.நா.பட்டதாரி ஆசிரியர் கூட்மைப்பின் மாநில பொதுச்செயலாளர் செய்தி


        த.நா.பட்டதாரி ஆசிரியர் கூட்மைப்பின்  மாநில பொதுச்செயலாளரின்  செய்தி

             ஜனவரி 25 திருச்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் , 

ஏற்பாடுகளை குழந்தை,செந்தில், கென்னடி,ரமேஷ் மற்றும் மாவட்ட
 
பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.அனைத்து மாவட்டங்களும் 

ஆயத்த பணிகளை செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வகுப்பில் மாணவரின் கற்றல் அடைவுத்திறனை மேம்படுத்த, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும், நடப்பு கல்வியாண்டு முதல், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தாங்களாகவே தங்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யவும், வகுப்பில் எதிர்பார்த்த நிலையை அடையவும்

03/01/2015 அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு - குருவள மைய பயிற்சி நடைபெறும் - நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


24/01/2015 அன்று உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு - குருவள மைய பயிற்சி நடைபெறும் - நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்



நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் பொறுப்பு ஒப்படைத்தல் தொடர்பான RTI விளக்க கடிதம்

SSA- CRC News


Pri:03/01/15
Up Pri:24/01/15
Topic:
PRI-(i)Child Psy and Enriching(i)Constitutional and Cultural values
Up Pri-Managing Pre-adolescent children and RTE CRC News
Pri:03/01/15
Up Pri:24/01/15
Topic:
PRI-(i)Child Psy and Enriching(i)Constitutional and Cultural values
Up Pri-Managing Pre-adolescent children and RTE

வராற்று சுவடுகள் -- 'லியொனார்டோ டாவின்சி'


 

1911-ஆம் ஆண்டு பாரிஸின் புகழ் பெற்ற லூவர் அரும்பொருளகத்திலிருந்து ஓர் ஓவியம் களவு போனது. ஓவியத்தைக் கூடவா திருடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவல்ல ஆச்சர்யம் அந்த ஓவியம் களவு போன பிறகு அது மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தைப் பார்க்கவே அரும்பொருளகத்தில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. ஓவியம் இருந்த இடத்தைப் பார்க்கவே உலகம் ஆசைப்பட்டது என்றால் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று யோசிக்கிறீர்களா? அந்த ஓவியத்தின் பெயரை சொன்னாலே உங்கள் உதடுகள் புன்னகை பூக்கும். சில காலங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த 'மகா ஓவியம்' இப்போது மீண்டும் அதே லூவர் அரும்பொருளகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது என்பது வேறு விசயம்

EMIS : பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரை

பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு

விருதுநகர்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் திருடு போன 'லேப்டாப்'புக்கு ஈடாக ரூ. 17 ஆயிரத்தை தலைமை ஆசிரியர்களே செலுத்த வேண்டும் என கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?

வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

திறனறி மதிப்பீடு முறை -ஆசிரியர்கள் எதிர்ப்பு -திரும்ப பெற வேண்டும்


திருச்சி மாவட்ட கலெக்டராக இருக்கும் ஜெயஸ்ரீ முரளிதரன் இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஆர்.கிர்லோஷ் குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி, தேனி, திண்டுக்கல் உள்பட 7 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

 


தேனி மாவட்ட கலெக்டராக இருக்கும் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் கலெக்டர் என்.வெங்கடாசலம், தேனி மாவட்ட கலெக்டராகவும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் டி.என்.ஹரிகரன் திண்டுக்கல் கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் வி.ராஜாராம் விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை



எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்

பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. பரமக்குடி அருகே பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில் இருந்த காகிதத்தை கிழித்து கீழே
போட்டுக்கொண்டே இருந்தார். இதை தலைமை ஆசிரியர் கண்டித்தார். இதனால் தலைமை ஆசிரியருடன் மணி வாக்குவாதம் செய்தார். சிறிது நேரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து மணி கூறுகையில். ''எனது நோட்டில் காகிதத்தை கிழித்து கீழே போட்டேன். அப்போது தலைமை ஆசிரியர், 'எதற்கு கிழித்து போடுகிறாய்' என தகாத வார்த்தையில் பேசி, கம்பால் அடித்தார்,'' என்றார்.
தலைமை ஆசிரியர் முருகன் கூறுகையில், “நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது தொடர்ந்து காகிதத்தை கிழித்து போட்டதால் கண்டித்தேன். என்னை அவன் தாக்கியதால் நிலை குலைந்து கீழே விழுந்தேன். தொடர்ந்து என்னை தாக்கிவிட்டு ஓடினான்,” என்றார்.
பரமக்குடி கல்வி அலுவலர் பழனியாண்டி கூறுகையில், “தலைமை ஆசிரியர், மாணவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்

எரிபொருள் இல்லாமல் இயங்கும் என்ஜின் தொழில்நுட்பம்: செயல்வடிவம் கொடுப்பதற்கு உதவ வேண்டுகோள்

எரிபொருள் இல்லாமல் இயங்கும் என்ஜின் தொழில்நுட்பத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சட்டப் படிப்பு ஆராய்ச்சி மாணவர் ஏழுமலை கண்டறிந்துள்ளார். இதற்கு செயல்வடிவம் கொடுக்க உதவ வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

கொதிக்கும் எண்ணெயில் பட்டதும் அதிவேகமாக நீராவியாக விரிவடையும் தண்ணீரின் ஆற்றலைக் கொண்டு இயங்கும் வகையில் இந்த என்ஜினுக்கான செயல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2015 ம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்

தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

.


குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதன் பிறகு, அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி வேலுசாமி திருச்சியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அவரது மனைவி தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார். இதையடுத்து, விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வேலுசாமி மீது அவரது மனைவி புகார் அளித்தார்.

UPLOAD YOUR CPS MISSING CREDIT ON ONLINE- CUDDALORE KEERAPALAYAM BLOCK

user name  0202_SB423
p.word        0202_SB423_123
AEO KPM

user name  0202_SB403
p.word        0202_SB403_123

இன்று சுனாமி நினைவு தினம் (26.12.2014)

மிகக் கொடிய குற்றப்பட்டியலில் சேர்ப்பு திராவகம் வீசினால் தூக்குத்தண்டனை மத்திய அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது


மிகக் கொடிய குற்றப்பட்டியலில் சேர்ப்பு திராவகம் வீசினால் தூக்குத்தண்டனை மத்திய அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது

 ராவகம் வீச்சு வழக்கை மிகக் கொடிய குற்றப்பட்டியலில் சேர்த்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் தூக்குத்தண்டனை வரை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடுமையான சட்டம் 
திராவகம் வீச்சு சம்பவங்களில் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவது, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு மிகவும் கவலையை அளித்துள்ளது. திராவகம் விற்பனையை சில மாநிலங்கள் கட்டுப்படுத்தி உள்ளது. சில மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. 
இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவில் மருத்துவ இணை இயக்குனர், குழந்தைகள் நல அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், போலீசார் இடம் பெற்றுள்ளனர். இக்குழு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கும். ஆண் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளை எப்படி கண்காணிக்க வேண்டும். பெண் ஆசிரியர்கள் ஆண் குழந்தைகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து

SSLC மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை


SSLC மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக தகுதியுள்ள மாணவ-மாணவியர் கொண்ட பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு மாணவர்கள் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்குநரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஏற்றவாறு முன்கூட்டியே ஆப்லைனின் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ஜனவரி 2ம் தேதி முதல் இப்பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்கத்தின் www.dge,tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி நகராட்சி/நகரிய உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்ந்து - இயக்குநர் செயல்முறைகள்


பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி நகராட்சி/நகரிய உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்ந்து - இயக்குநர் செயல்முறைகள்

 

 CLICK HERE

குரூப் 2A காலி பணியிட தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட 

அறிக்கை: குரூப் 2 பதவியில் அடங்கிய உதவியாளர், கீழ்நிலைஎழுத்தர்,  கணக்காளர் மற்றும் நேர்முக எழுத்தர் ஆகிய பதவியில்காலியாக உள்ள
இடங்களுக்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 29ம்தேதி 
நடத்தியது. இத்தேர்வு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வு பிராட்வே பேருந்து நிலையம் அருகே உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 29ம் தேதி  நடக்கிறது.

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனச்சிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி உத்தரவு


நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள்

மாணவர்களுக்கு நற்சான்று வழங்கும் தலைமையாசிரியர்கள் கல்வித்துறையின் உத்தரவால் அவர்களுக்கே நற்சான்று கேட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளை தேடி அலைகின்றனர்.

தமிழகத்தில் 2007ல் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தற்போது மாவட்ட கல்வி அலுவலருக்கான (டி.இ.ஓ.,) பதவி உயர்வு பேனல் தயாரிக்கப்படுகிறது. மாநில அளவில் 600 பேர் வரை இந்த பேனலில் உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

அ.தே.இ-பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த வாரத்தில் சில செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்தி தவறானது என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


குரூப் 2A காலி பணியிட தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட 
அறிக்கை: குரூப் 2 பதவியில் அடங்கிய உதவியாளர், கீழ்நிலைஎழுத்தர்,  கணக்காளர் மற்றும் நேர்முக எழுத்தர் ஆகிய பதவியில்காலியாக உள்ள
இடங்களுக்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 29ம்தேதி 
நடத்தியது. இத்தேர்வு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வு பிராட்வே பேருந்து நிலையம் அருகே உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 29ம் தேதி  நடக்கிறது

இனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும் தான்- தமிழக அரசு அரசாணை


தமிழகத்தில் உள்ள மேயர்களை இனி வணக்கத்திற்குரிய என்று அழைக்காமல், மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சி உட்பட 10 மாநகராட்சி மேயர்களும், வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கடந்த, 10ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 157ல், இனி மாநகராட்சிமேயர்களை, 'வணக்கத்திற்குரிய' என்று அழைக்காமல், 'மாண்புமிகு மேயர்' என்றுதான் அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இந்த அரசாணை, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

New IT form XL FOR 2015

1.NEW IT FORM 2015 XL DOWNLOAD

2.SIMPLE IT FORM XL 

அரசு நர்சிங் பள்ளிகளில் 100 இடங்களுக்கு அனுமதி

வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11 பள்ளிகளில் 50 இடங்கள், மற்ற பள்ளிகளில் 60 முதல் 90 இடங்கள் 

அனுமதிக்கப்பட்டிருந்தன. தேவை காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட நர்சிங் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலான மாணவிகள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

கட்டாய கல்வி சட்டம்: இனி மாணவரை சேர்க்க முடியுமா? கட்டணத்தை அரசு தராததால் பள்ளிகள் சங்கம் முடிவு


கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர்க்கையை நடத்தப் போவதில்லை என, தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

25 சதவீதம்:


நாட்டில், 6 - 14வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கல்வி அடிப்படை உரிமை. நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடம் அளிக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அரசே வழங்கும் என்பது, கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படை. இந்த சட்டம், 2009ல் அமலுக்கு வந்த போதும், தமிழகத்தில், 2011ல் அமல்படுத்தப்பட்டது. அதன் பின், இச்சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தனியார் பள்ளிகளில்,

Tamil Nadu Open University B.Ed & B.Ed(SE) Term End Examination Results December 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்


பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதிதொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்குவந்து
சேர்ந்துள்ளது. தற்போது அவற்றை சரிபார்க்கும் பணியில்தேர்வுத்துறை  தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து நேற்று நாமினல் ரோல் பட்டியல் அனைத்துபள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை சரிபார்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கூட்டம் நடக்கிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்

உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் 


செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

செல்வி.அபூர்வா 
        உயர்கல்வித் துறைச் செயலாளர் 
(தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர், இந்திய மருத்துவத் துறை  ஆணையாளர்) 

GROUP - 4 , தேர்விற்கான விடைகள் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது


 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
(Date of Examination:21.12.2014)

         1
         2
         2
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 30th December 2014 will receive no attention.

SSLC MODEL QUESTION PAPER & ANSWER

வேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு


வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை தொடக்க நகராட்சி உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு அவர்களுடைய வளர்ச்சியில் பள்ளி பருவம் ஒரு முக்கியமான பருவமாகும். இப்பருவத்தில் மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவதால் உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுவதாக அநேக ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

செல்போன் பயன்படுத்துவதால் காது, இருதயம் மற்றும் மூளை பகுதிகளில் தளர்வு ஏற்படுவதாகும். நரம்பு சார்பான தொல்லைகள் ஏற்படுவதாகவும் இக்கோளாறுகளினால் பள்ளி மாணவர்களுக்கு