Breaking News

SLAS QUESTION PAPERS DOWNLOAD 2013-2014 , 2014-2015 Download..- thanks to thamilagaasriyar.com

CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...


*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.

* 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.

31.12.2015 - D.A 125% --- 7th pay fix method


01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%
கூடுதல் (119% + 6%) = D.A 125%.
கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)

10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு


'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும்.

"எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி'கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்


பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு..


சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
.அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தை வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு சேர்க்கை பெறலாம்.

மழை விடுமுறை , பகுதி நேர ஆசிரியர்களுக்குஊதியம் கிடைப்பதில் சிக்கல்


'மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!


'வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை, கடந்த சில நாட்களாக சற்று குறைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில், 'தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு, கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:

பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்.


CLICK HERE TO DOWNLOAD RTI LETTER

Thanks To - Computer Instructor, GHSS, Ariyalur District.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் SLAS தேர்வு


Conduct of SLAS for the Classes III & V 17.12.2015 &18.12.2015

 Conduct of SLAS for the Classes VIII  21.12.2015 &22.12.2015

பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா


மதுரை :மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் உள்ளதுபோல், உதவி பெறும் பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து,

செய்முறை பயிற்சி தேர்வு உண்டா 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பம்


அறிவியல் செய்முறை புத்தகம் வழங்காததால், அதற்கான பயிற்சி தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டம் துவங்கிய பின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வகத்தில், செய்முறை பயிற்சியும், செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்காக, 75 மதிப்பெண், 'தியரி'க்கும், 25 மதிப்பெண் அறிவியல் செய்முறை பயிற்சிக்கும் தரப்படுகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா,
நான்கு செய்முறை பயிற்சிகள் உள்ளன.இவற்றில், தலா, ஒரு பயிற்சி வீதம், மொத்தம், நான்கு கேள்விகள், செய்முறை தேர்வில் இடம் பெறும். இதற்காக, செய்முறை பயிற்சி நோட்டுப் புத்தகமும், பாட புத்தகமும் இலவசமாக வழங்கப்படும். காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்ததும், இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.

92 ஆசிரியர் பணியிடம்விண்ணப்பங்கள் வரவேற்பு


சென்னை,: மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், 92 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 105 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், 62 இடைநிலை ஆசிரியர் பணியிடம், 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 13 துணை வார்டன் பணியிடம், நிரப்பப்பட உள்ளன. இந்த விவரம் தமிழ்நாடு அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விரும்புவோர், சென்னை, கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளி கமிஷனர் அலுவலகத்திற்கு, டிச.,15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வகுப்பில் செல்லிடப்பேசி பயன்படுத்திய மாணவிகள்: ஆசிரியர் கண்டித்ததால் அரசுப் பள்ளி முற்றுகை


கோவை மாநகரில் வகுப்பறையில் செல்லிடப்பேசி பயன்படுத்திய மாணவியை ஆசிரியர் அடித்ததாக எழுந்த புகாரை அடுத்து, புதன்கிழமை மாணவியின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை ராம் நகர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 12-ஆம் வகுப்பில் பயிலும் 5 மாணவிகள், செவ்வாய்க்கிழமை பாட வேளையின்போது செல்லிடப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த வகுப்பு ஆசிரியர், இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் நிர்மலா தேவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவிகளை வரவழைத்த அவர், 4 பேரிடம் இருந்த செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளார். தர மறுத்த ஒரு மாணவியை அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அறிவித்தபடி அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவு


அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டு பட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகால அட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது (RTI-பதில்).



NMMS EXAMINATION (2016) ANNOUNCED FOR VIII STD

பள்ளி செல்லா குழந்தைகள் விபரம்: 8 ம் வகுப்பு வரை சேகரிக்க உத்தரவு


எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் விபரங்களை சேகரிக்க, கல்வி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில், 14 வயது வரை, கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என கட்டாயக்கல்விச்சட்டம் வலியுறுத்துவதால், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது

3 days SMC training - SPD proceedings


DECEMBER MONTH TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS.

டிசம்பர் மாதம் Training.. மாதம்....

*.IED Training: -

(30.11.2015)to (4.12.2015) - 5 days
IED TRAINING for primary teachers
Another 5 days IED training for upper primary teachers 
Another 5 days IED training for Angan wadi

*.SMC Training:-

"wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் டெக்னாலஜி "Li-fi"


தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ  விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு,  ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். 

இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்':


மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்துஉள்ளது.தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிபகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

யார் ஒரு சிறந்த ஆசிரியர்?

ஒரு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு உள்ள ஆசிரியர்களை அழி!

ஒரு நாட்டின் வரலாற்றை (கடந்த காலத்தை) அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் நூலகத்தை அழி!
ஒரு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு உள்ள ஆசிரியர்களை அழி!
இதுதான் ஆதிக்க வாதிகளின் தாரக மந்திரம். இதனால் தான் தீவிரவாதத்தை வளர்க்க விரும்புபவர்கள் முதற்கட்டமாக அங்கு உள்ள பள்ளிக்கூடத்தை மூடுவர்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ'



கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல்திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த சிறப்பு குழு அமைப்பு



புதுடில்லி: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, குழு ஒன்றை, மத்திய நிதியமைச்சகம் நியமித்து உள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது ஊதியக்குழு,

அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்?


'தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.

பாடத்தை கவனிக்காமல் மொபைல்போனில் விளையாட்டு: ஆசிரியர் சோதனையில் சிக்கினர் பள்ளி மாணவியர்


கோவை,: கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மொபைல்போனில் விளையாடிக்கொண்டிருந்த மாணவியர் ஐந்து பேர், கையும் களவுமாக சிக்கினர்.

கோவை ராம் நகர், ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2, 'சி' பிரிவில், நேற்று முன்தினம், வணிகவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, மாணவி ஒருவர், மொபைல்போனில் பேசியுள்ளார்; வேறு சில மாணவியரும், மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதிர்ச்சியடைந்த ஆசிரியர், தலைமையாசிரியர் நிர்மலா தேவி முன்னிலையில் சோதனை நடத்தினார். இதில், மாணவியர் ஐந்து பேரிடம் இருந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று காலை பள்ளிக்கு வந்த பெற்றோர், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை


அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

PD-1960/IED Training/SSA/2015 நாள்:12.10.2015 ன்படி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க/உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி

மாவட்ட அளவில்
தொடக்கநிலை(23.11-27.11.2015 முடிய 5 நாட்கள்)
வட்டார அளவில் (7.12.2015-11.12.2015) வரை 5 நாட்கள்.
>உயர் தொடக்க நிலை
மாவட்ட அளவில் (7.12.15-11.12.2015) வரை 5 நாட்கள்.
வட்டார அளவில் (16.12.2015-18.12.2015&21,22) வரை 5 நாட்கள்.

பள்ளியில் மது அருந்திய 4 மாணவியர் 'டிஸ்மிஸ்


நாமக்கல்: பள்ளி வகுப்பறையில் பிறந்த நாள் விருந்து கொண்டாடிய அரசு பள்ளி மாணவியர், குளிர்பானத்தில் மது கலந்து குடித்து, 
போதையில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, நான்கு மாணவியரையும், 'டிஸ்மிஸ்' செய்து, பள்ளி தலைமையாசிரியை 'டிசி' வழங்கினார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2,000-க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். 

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மனுக்கள்: பரிசீலனை நடவடிக்கையை இணையத்தில் அறியலாம்


வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணி செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 24 வரை நடைபெற்றது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
 பெயர் சேர்ப்பு, விவரங்கள் திருத்தத்துக்காகப் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி-மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் மீதுள்ள விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டு, விண்ணப்பதாரர்களின் இருப்பிட விவரங்களை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்தால் ஒரு இடத்தில் பெயர் நீக்கத்துக்கான துண்டறிக்கையை வழங்குகின்றனர். மனுக்கள் மீதான பரிசீலனை நடவடிக்கையை www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிர்ப்பு: வேலைநிறுத்தத்தில் ஈடுபட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு


மத்திய அரசு ஊழியர்கள், 7-வது ஊதியக் குழு பரிந்துரையைக் கண்டித்து வரும் 24-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.


இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு அமைத்த 7-வது ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். 5, 6-வது ஊதியக் குழுவில் 40 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால், 7-வது குழு வெறும் 14.2 சதவீதம் அளவுக்கு மட்டுமே ஊதிய உயர்வை பரிந்துரைத்துள்ளது.

புதிய பென்சன் திட்டத்தில் பலன் பெறாமலே இறந்த தம்பதி - போராடியும் பலனில்லை.


அகஇ-சிறப்பாசிரியர்கள்,தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில்,வட்டார அளவில் 5நாட்கள் பாடப்பொருள் சார்ந்த பயிற்சி வழங்குதல் சார்ந்து-செயல்முறைகள்

பி.லிட்.,பட்டத்துடன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்று பணியாற்றுபவர்கள் பி.எட்.,தேர்ச்சிக்கு ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு...RTI-தகவல்...


Flash News : கன மழை - 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (25.11.2015) விடுமுறை


*சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு டிச 09, 10 11 ஆகிய நாட்களில் .. "படைப்பாற்றல் கல்வி முறையில் கணிதம் கற்பித்தல்" என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி நடைபெறும் - செயல்முறைகள்



ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை குறித்த DAKSHIN RAILWAY EMPLOYEES UNION-இன் கண்டன அறிக்கை



திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை


ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன், மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும், திறன் அடிப்படையிலான சம்பளம் வழங்க பரிந்துரைத்துள்ளது. ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரைகள் விவரம்:

மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் செயலாற்றல், வகுக்கப்பட்ட வரையறைக்கு உட்படவில்லை எனில், வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கக் கூடாது. சிறந்த செயலாற்றலுக்கான அளவீட்டை, 'நன்று' என்பதில் இருந்து, 'மிக நன்று' என உயர்த்த வேண்டும்.

7-வது ஊதியக்குழு-ஈட்டிய விடுப்பு ஓய்வுபெறும்போது -ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு 240 நாட்களுக்கு பதில் 300 நாட்களாக உயர்வு


Simple 7th Central Pay Commission Pay Calculator based on 7th CPC Recommendation


This helps you calculate the new salary based on the 7th CPC recommendations that was released on 19 Nov 2015.

Points to note while using this calculator:

7–வது சம்பள கமிஷன்: லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் 23 சதவீதம் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பட்டியலில் மிகவும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம்


7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம்நடத்த உள்ளனர்.

7-வது சம்பள கமிஷன்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் தொடர்பான 900 பக்கங்கள் கொண்ட சிபாரிசு அறிக்கையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், சம்பள கமிஷன் குழு தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். 

ஆதார் அட்டை இல்லாத அரசு அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு


தொடக்க கல்வி- கடந்த ஒருவாரமாக பெய்யும் கனமழை காரணமாக எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை கள் இயக்குனர் உத்தரவு

IGNOU - Hall Tickets for December 2015 Term End Examination

வீடு, கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை எகிறும்: 7-வது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது


புதுடில்லி: 'ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் கையில், தாராளமான பணப்புழக்கம் இருக்கும்; இதனால், வீடு, கார், டூ - வீலர், வீட்டு உபயோகப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எகிறும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 2016 ஜன., 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என, ஒரு கோடி பேரின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியம், 23 சதவீதம் அளவுக்கு உயரும். அப்போது, அவர்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த பணத்தை, அவர்கள் உபயோகமாக செலவழிக்க திட்டமிடுவர்.

பிளஸ் 2 தனித்தேர்வு: விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்


பிளஸ் 2 தனித்தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை கோரியவர்கள் சனிக்கிழமை (நவ.21) காலை 10 மணி முதல் அவற்றைப் பதிவிறக்கம் செய்யலாம்.
 இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

 கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வை எழுதியவர்கள் தங்களது விடைத்தாள்களை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம், பதிவு எண், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம். 
 இதன் பிறகு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதையும் தப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய் விண்ணப்பங்கலை நவம்பர் 23 முதல் 25-ஆம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில், கட்டணத்தையும் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஊதியம் எவ்வளவு உயரும்?



7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஊதியம் எவ்வளவு உயரும்?

மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை...



7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஆசிரியர்களுக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்: (as a primary HM)
*****************************
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970

*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
22970 x  2.57 = 59,033
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************

Flash News: 7வது ஊதியக் குழு அறிக்கையை நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்.HIGHLIGHTS OF 7TH CPC


7வது ஊதியக் குழு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு அருண் ஜெட்லியிடம் நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்.
The Chairman of the Seventh Pay Commission, Justice A.K. Mathur submitted its report to the Union Minister for Finance, Corporate Affairs and Information & Broadcasting, Shri Arun Jaitley, in New Delhi on 19 November 2015. Image courtesy PIB
புதுடில்லி: 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது. 
குழுவின் தலைவர் ஏ,கே., மாத்தூர் மத்திய அமைச்சர் நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் 900 பக்க அறி்க்கையை சமர்பித்தார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 18, ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ 2. 25 லட்சம் வரை வழங்கவும், ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், வீ்ட்டு வசதி கடனை 25 லட்சம் வரையில் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த மாணவர்களுக்கு மீண்டும் இலவச புத்தகம், சீருடை


தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், வேலுார், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி: ஆட்சியரிடம் வலியுறுத்தல்


ஆசிரியர்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, அமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் கிளைத் தலைவர் பி. ராஜ்குமார், செயலர் செ. பால்ராஜ், பொருளாளர் சே. சுப்பிரமணியன், நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை, ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனு: 2016இல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணியின்போது ஏற்படும் பல்வேறு இன்னல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் 250 செ.மீ. மழை கொட்டுமா? நாசா கூறியதாக வாட்ஸ்அப்-ல் பரவும் தகவல் உண்மையில்லை


வருகிற 21 அல்லது 22 ஆம் தேதி சென்னையில் மிகவும் பலத்த மழை பெய்யும். அது 250 செமீ அளவுக்கு இருக்கும் என நாசா கூறியதாக வாட்ஸ்அப்பில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என தெரிகிறது.

தலைமை ஆசிரியர்கள் ஆசிர்யர்கள் முற்பகல் 8.30மணிக்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்குச்சென்று வகுப்பறைகளை முழுவதும் ஆய்வு செய்து உறுதி செய்த பின்னரே வகுப்பறையில் மாணவர்களை அமர வைக்கப்பட வேண்டும்.-- இணை இயக்குனர் மீளாய்வுக் கூட்டத்தில் உத்தரவு


18-11-2015 வேலூரில் நடைபெற்ற இணை இயக்குனர்( Hsc.JD)மீளாய்வு கூட்ட தகவல்:தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்: ந.க.எண்.28804/ஜே2/2015.  நாள்.17-11-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர்  செயல்முறைகள். ந.க.எண்.34764/எம்/இ1/2015, நாள்.15.11.2015 தொடர் மழை காரணமாக அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவறாமல் கடைபிடிக்குமாறும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  நாளை 19-11-2015 முற்பகல் 8.30மணிக்கு முன்னதாக அனைத்து  ஆசிரியர்களும் பள்ளிக்குச்சென்று வகுப்பறைகளை முழுவதும் ஆய்வு செய்து உறுதி செய்த பின்னரே வகுப்பறையில் மாணவர்களை அமர வைக்கப்பட வேண்டும். பள்ளியில் மாணவர் பாதுகாப்பிற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை எனில் உடனே தொடக்கக்கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு மாற்று ஏற்பாடு செய்தல் வேண்டும்.

PINDICS - ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு

படிவம் நிரப்புவதற்கு உதவியாக 1.1.2015 முதல் நடைபெற்ற பயிற்சிகள் விவரம்(பயிற்சிகள்  மற்றும் தேதிகள் வட்டாரத்தை பொறுத்து மாறுபடலாம்)

ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு
குறுவளப் பயிற்சி
03.01.2015 - குழந்தை உளவியல் மற்றும் குடிமைப் பண்பு மதிப்புகள்
28.02.2015- பயிற்சியின் தாக்கம்
14.03..2015- குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துறையாடல் QMT
20.06.2015- குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துறையாடல்  QMT
11.07.2015- CCE SABL
29.08.2015- சுகாதாரம் மற்றும் உடல்நலக் கல்வி
07.11.2015- CCE -ல் அறிவியல் செயல் திட்டம்
வட்டார வளமையப் பயிற்சிகள்

ஏழாவது ஊதிய ஆணையம்: 15 சத உயர்வுக்கு பரிந்துரை!


மத்திய அரசு அமைத்துள்ள ஏழாவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 15 சத உயர்வு மட்டுமே இருக்கும் என தெரிகிறது. மத்திய அரசு மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஏழாவது ஊதிய ஆணையம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில்  நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையில் அமைக்கப்பட்டது.

BRTE - கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கட்டிட சேத விவரங்களை சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு


விடுமுறை தினத்தை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


7th Central Pay Commission has completed its deliberations and will submit the report to the Government of india on 19.11.2015 at 19.30 hrs


CRC க்கு சென்றால் சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு - விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் பதில்!!! (நாள் :30/10/2015)


கடலூர் மாவட்டத்தில் 500 பள்ளிகள் சேதம்


கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. 30 ஆயிரம் மாணவர்கள் பாட புத்தகங்களை பறிகொடுத்து இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத வகையில் பருவமழை கொட்டி தீர்த்தது. 

அதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 400 கிராமங்கள், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. கனமழைக்கு இதுவரை கடலூரில் 55பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

ஆதார் எண் Online E -Pay Roll - ல் இணைக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்


DA: 50% அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு அறிவிப்பு


மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:


"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

பத்தாவது நாளாக பள்ளிகள் மூடல்:பல்கலை தேர்வுகள் மீண்டும் ரத்து


சென்னை:தொடர்ந்து, 10வது நாளாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, 6ம் தேதி சனிக்கிழமை முதல், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; தீபாவளி முடிந்து, 11ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மூவகை சான்றிதழ்; 'மூச்சு முட்டும்' ஆசிரியர்கள்: பயன்படுமா 'இ சேவை' மையம்


மதுரை;பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் (மூவகை சான்று) வழங்குவதற்கு மாணவர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, மின்னணு உபகரணங்கள் வசதி இல்லாததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களில், மூவகை சான்றும் ஒன்று. இதை டிசம்பருக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும்,

எஸ்.ஐ. தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியீடு



காவல் துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வு முடிவு இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 1078உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

மழையால் பாதித்த வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டாம்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்


மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-

வட கிழக்குப் பருவமழை காரணமாக, அடுத்துவரும் நாள்களிலும் தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆய்வு அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக சில அறிவுரைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

கனமழை முன்னறிவிப்பின் காரணமாக அண்ணாமலைப்பல்கழகத்திற்கு வரும் 18.11.2015வரை விடுமுறை அறிவிப்பு


கனமழை முன்னறிவிப்பின் காரணமாக அண்ணாமலைப்பல்கழகத்திற்கு வரும் 18.11.2015வரை விடுமுறை அளிக்கப்படுகிறது எனினும் நவம்பர் 23ம் தேதி வரை நடைபெறவுள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன் அவை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
எனினும் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை மற்றும் அனைத்து அத்தியாவசியப்பணிகளும் தொடர்ந்து செயல்படும் என பல்கலைகழக பதிவாளர் முனைவர் க.ஆறுமுகம் பொறுப்பு அறிவித்துள்ளார்.