Breaking News

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மையம் அமைத்தல் , தேர்வுக் கட்டணம் வசூல் , விடைத்தாள் மதிப்பீட்டு பணி , மதிப்பெண் பதிவேடு தொடர்பான தெளிவுரைகள் வெளியீடு


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் ( திருத்தம் ) சட்டம் , 2019 இன்படி மாநிலப் பாடத்திட்டத்தினை பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 2019 - 2020ஆம் கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்த பார்வை 3 இல் கண்ட அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டது . பார்வை 4 இல் காணும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டது . பார்வை 6 இல் கண்ட பொதுப்பள்ளி கல்வி வாரியக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட நெறிமுறைகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்திய நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்க்கண்டவாறு அனுப்பப்படுகிறது .

NEW IT SOFTWARE 2020