Breaking News

BT TO PG ADDITIONAL PROMOTION PANEL AFTER 24.08.2015 RELEASED

"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாள்


முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் மேற்கொள்ள -கேட்- (பொறியியல் பட்டதாரி நுண்ணறித் தேர்வு) தேர்வில் தகுதி பெறுவது அவசியம். சில கல்லூரிகள் இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே, முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்த்துக்கொள்கின்றன.
 இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.), ஐஐடி நிறுவனங்கள் இணைந்து இந்தத் தேர்வை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 1-ஆம் தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது இது அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 2016-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு 2016 ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கு "ரேங்கிங்' நடைமுறை அறிமுகம்


நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

 இந்த நடைமுறை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் www.mhrd.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு வெளியிடப்படும். இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த துணைக் குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் ஆண்டில், துணைக் குழு ஒன்று இந்த தரவரிசைப்படுத்தும் நடைமுறைகளை மேற்கொண்டு பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளது. அதன் பிறகு, இதற்கென தனி அமைப்பு அல்லது வாரியத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது. இரண்டு பிரிவுகளின் கீழ் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

பிச்சை எடுத்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு - ரஷ்யா சென்றடைந்தார்


கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்த ஒரு மாணவிக்கு, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ரஷ்யா சென்றடைந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். பின்னர் அந்த பெண்ணை பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அவருடைய மகள்களான கார்த்திகா, சர்மிளா ஆகிய 2 பேரும் தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

விடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை


தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதி முதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என, இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

ஆனால், பல இடங்களில் தனியார் பள்ளிகள், சில நாட்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துவிட்டு, வகுப்புகளை துவங்கி விட்டன. இதனால், மாணவ, மாணவியர் குழப்பமடைந்து உள்ளனர்.

பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு


பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

முன்னதாக, இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நலப் பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த முன்பணம் இப்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உன் உரிமையைப் பெற நீ போராடித்தான் ஆகவேண்டும்! போராட்டமே வெற்றியை தேடித் தரும்!


வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை. நமது அக்டோபர் 8, வேலைநிறுத்தப் போரட்டமும் அப்படித்தான்
ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

சிந்தனைக் கதை- கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்


ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்."கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசுப்பங்களிப்பு ரூ.6000 கோடி இது வரை வழங்கவில்லை: அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக் குழு சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள் அரசின் கொள்கைக்குட்பட்டது என கோரிக்கை நிராகரித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்


2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்


மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

38 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். மத்திய அரசின் புதியகொள்கைக்கு எதிராக நவம்பர் 23–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடப் போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர்.அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயம், ஆட் குறைப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

வங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு

வங்கி எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சென்னையில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கம், "எம்பவர்' சமூக நீதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

பள்ளிகளில் 'டெங்கு'வை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை


பள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழக அரசு சார்பில் செப்.,14ல் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில், திருப்பூர், திருச்சி, சேலம், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டது.

அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை


மத்திய அரசு வழங்கியதுபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
 இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 2015 ஜூலை முதல் தேதியிலிருந்து அகவிலைப்படியினை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது தற்போது வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 113 சதவீதம் என்பதை 119 சதவீதமாக உயர்த்தி வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு மேற்படி அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். எனவே, இதற்கான உத்தரவை பிறப்பித்திடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது. 

அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சிஇஓ பணியிடங்களை நீட்டிக்கக் கோரிக்கை


அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும் என தமிழக மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கம் கோரியுள்ளது.
 இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

 இதில் சங்கத்தின் தலைவர் தமிழ்மணி, பொதுச்செயலாளர் பா.ப்றைட் சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்தக் கூட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.


அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.


வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், வட்டாட்சியர் (தாசில்தார்), கோட்டாட்சியர், மாவட்ட வழங்கல் அதிகாரி, மாவட்ட வருவாய் அதிகாரி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும், அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது


தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில்  உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இவர்களுக்கான கலந்தாய்வை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், லேடி வெலிங்டன் கல்லூரியில் பேசியதாவது: பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 2011ம் ஆண்டு 18 சதவீதமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கை வீதம் தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது.


ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்காக காரப்பாக்கத்தில் ரூ.38 கோடியில் புதிய கட்டிடம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும். அரசு பிஎட் கல்லூரிகளில் தற்போது கல்வி கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமாகவும், சுயநிதி கல்லூரிகளில் 41 ஆயிரத்து 500கவும் உள்ளது. 2 ஆண்டுகளுக்கான கல்விகட்டணம் நிர்ணயம் செய்ய உயர்கல்வி கட்டண நிர்ணய குழுவான பாலசுப்பிரமணியன் கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் புதிய கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

திட்டமிட்டபடி அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுததம் நடைபெறும்; இன்றைய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு


இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கட்டடத்தில் சுழற்சிமுறை தலைமையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர்(பொறுப்பு) திரு. செல்வராஜ் மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி சங்கங்களின் சார்பில் திரு.இளம்பருதி ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். 

ஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் இணையதளம் நவம்பரில் செயல்படத் தொடங்கும்: யுஜிசி துணைத்தலைவர் தேவராஜ் தகவல்

ஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் வகையிலான புதிய இணையதள சேவை நவம்பரிலிருந்து செயல்படத் தொடங்கும் என யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.


 உதகை அருகே உள்ள கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 நாட்டின் கல்வி வளர்ச்சியில் பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டி வருகிறார். நாட்டில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்பில்லை. நடப்பாண்டில் தமிழகத்தில் மட்டும் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் காலியாகவுள்ளன. இவற்றை மறு சீரமைக்கும் முயற்சியாகவே மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகிய 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்


கோல்கட்டா:''ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் உள்ள, விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் நேதாஜியின் அஸ்தியை,டி.என்.ஏ., சோதனை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்,'' என, நேதாஜியின் மகள் அனிதா போஸ், 72, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிப்படை:

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நம் நாட்டை அடிமைப்படுத்தி இருந்த போது அவர்களை விரட்டியடிக்க, இந்திய தேசிய ராணுவம் என்ற பெயரில் தனி படையை உருவாக்கியவர், வங்கத்தைச் சேர்ந்த, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.அவர், கடந்த, 1945ல், ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்ததாக கூறிய அப்போதைய ஆட்சியாளர்கள், அப்போதே அந்த விவகாரத்தை முடிந்து வைத்துஉள்ளனர்.

நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்


கோல்கட்டா:''ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் உள்ள, விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் நேதாஜியின் அஸ்தியை,டி.என்.ஏ., சோதனை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்,'' என, நேதாஜியின் மகள் அனிதா போஸ், 72, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிப்படை:

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நம் நாட்டை அடிமைப்படுத்தி இருந்த போது அவர்களை விரட்டியடிக்க, இந்திய தேசிய ராணுவம் என்ற பெயரில் தனி படையை உருவாக்கியவர், வங்கத்தைச் சேர்ந்த, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.அவர், கடந்த, 1945ல், ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்ததாக கூறிய அப்போதைய ஆட்சியாளர்கள், அப்போதே அந்த விவகாரத்தை முடிந்து வைத்துஉள்ளனர்.

AEEO grade pay 4900 raised - order

பள்ளிக்கல்வி-கணினி பயிற்றுநர்களுக்கான பொது மாறுதலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..

செப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு


பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 


தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

8642 BT, PG PAY CONTINUANCE ORDER


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு எவ்வாறு வழங்கப்பட வேண்டும்? -RTI பதில்


பள்ளிக்கல்வி - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை "இளைஞர் எழுச்சி நாள்"- ஆக கொண்டாட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு


அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, அரசு செலவில் வழங்கப்படும் ஊதியம் வீணாகிறது என, புகார்கள் எழுந்துள்ளன.

EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...


தளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் சிறிது காலம் செயல்படாமல் இருந்த EMIS இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது,எனவே தலைமையாசிரியர்கள் I-Vlll வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விபரங்களை Student என்பதை Click செய்து உங்களது மாவட்டம்.,ஒன்றியம்.,பள்ளி,வகுப்பு என்பதை தேர்வு செய்வதன் மூலமாக அறியலாம்.I வகுப்பு மாணவர்களின் விபரங்களயும் ஏற்றலாம்.

கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு


முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில்  கூறியதாவது:–

மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், தரமான கல்வியை வழங்கும் நோக்கிலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பல வகைத்தொழில் நுட்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது பல்கலைக்கழக துறைகளை உள்ளடக்கிய 4 வளாகங்களையும், 13 உறுப்புக் கல்லூரிகளையும் மற்றும் 4 மண்டல அலுவலகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த துறைகள் மிகச் சிறப்பு வாய்ந்த வளர்ச்சி நிலைக்கு உயர்த்தப்படும். மேலும், விடுதிகள், போக்குவரத்து வசதிகள், மைய நூலகங்கள், கணினி மையங்கள், சூரிய ஒளியில்இருந்து ஆற்றல் உருவாக்கும் அமைப்புகள், ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்


தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, இயற்கை கிருமிநாசினி தயாரித்து, அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.ஆமதாபாத், 'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, 'புராஜக்ட் எக்ஸ்போ' போட்டி நடத்தப்படும். இந்தாண்டு தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில், கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக, பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள், நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோர், இயற்கை கிருமிநாசினியை கண்டுபிடித்துள்ளனர்.

7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்!


மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஏழாவது சம்பள கமிஷன், விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியர்கள், பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான, சம்பள உயர்வு குறித்த அறிக்கை தயாரித்து, அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. கடைசியாக, 2006ம் ஆண்டு, ஆறாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது.

1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரண பயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு


1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரண பயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும், “கணித உபகரண பயிற்சி பெட்டி” அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு, உதவி பெறும் பள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளும், 15 ஆயிரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. அதேபோல, 7,307 அரசு நடுநிலை பள்ளிகளும், 2,400 அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.


இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை கணித அறிவை பெருக்குவதற்காக தமிழக அரசு கணித உபகரண பெட்டி பயிற்சி (maths kids box training) என்ற பயிற்சியை வழங்கி வருகிறது. இந்த பயிற்சியின் மூலம், கணிதத்தின் அடிப்படையான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவற்றை எளிமையாக கற்றல், கற்பித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டார வள மையங்களில் கடந்த 10, 11, 14ம் தேதிகளில் ஒரு பிரிவாகவும், 15, 16, 18ம் தேதிகளில் ஒரு பிரிவாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு& 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, செப். 23–முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:–கடந்த நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். தொடக்கப் பள்ளிகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ள 39 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நடுநிலைப் பள்ளி ஒன்றுக்கு 3 பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் வீதம் 15 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் என, 78 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் தர வேண்டும்: மத்திய அரசு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


இருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களேவழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:


நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தியது தொடர்பான அறிக் கையை அரசு தாக்கல்செய்துள்ளது. அதில், ஹெல்மெட் அணியாததால் ஜூன் மாதம் 582 பேர், ஜூலை மாதம் 498 பேர், ஆகஸ்ட் மாதம் 571 பேர், செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை 289 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, ஜூலை மாதம் மட்டும் ஹெல்மெட் கட்டாய உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவ்வாறு அமல்படுத்தப் படவில்லை என்று தெரிகிறது.

தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடிப்பு


பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்



*புதியதாக 39 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 5 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி உத்தரவு. இப்பள்ளிகளுக்கு புதியதாக 78 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு

அறிவியல் போட்டிக்கு மாணவர் தேர்வு - இன்றைய தினமலர் நாளிதழில் (22.9.2015)


அறிவியல் போட்டிக்கு மாணவர் தேர்வு - இன்றைய தினமலர் நாளிதழில் (22.9.2015 காஞ்சிபுரம்:தேசிய அளவிலான, 'இன்ஸ்பயர் அவார்டு' கண்காட்சியில் கலந்து கொள்ள, காஞ்சிபுரம், பாலர்நேசன் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: B/45706/CSB-2015/AWES

மொத்த காலியிடங்கள்: 7,000

பணி: PGT (Post Graduate Teacher)

பேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5 பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு!

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பவித்ரா உள்பட 5 மாணவர்கள் ஜப்பானுக்கு இலவச சுற்றுலாச் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.


 தொழில்பயிற்சிக்காக ஜப்பான் சென்று திரும்பியவர்களால் தொடங்கப்பட்டது "ஏபிகே- ஏஓடிஎஸ் தோசோகாய்' தமிழ்நாடு மையம். இந்த மையம் "ஹியோஷி கார்ப்பரேஷன்' என்ற ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுதோறும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த சில வாரங்களாக பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வந்தது. பின்னர், பரிசளிப்பு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பி.எட்., 'கட் - ஆப்' அறியஇணையதளத்தில் புதுவசதி


பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.
மொத்தமுள்ள, 1,750 இடங்களுக்கு, 7,440 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இவர்களில், 1,130 பேர் பி.இ., - பி.டெக்., பட்டதாரிகள். பி.எட்., படிக்க விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான, 'கட் - ஆப்' விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும், 28 முதல் அக்டோபர், 5ம் தேதி வரை நடக்கும், கலந்தாய்வு விவரங்களும், கல்லுாரி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு முதன்முறையாக, http://www.ladywillingdoniase.com என்ற இணைய தளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட, 'கட் - ஆப்' விவரங்களை பார்க்கும் வகையில், தனியாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. http://61.8.146.180/ladywillingdon/default.Aspx என்ற இணைப்பில், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்தால், மதிப்பெண்ணை காணலாம்.

உதவியாளர் பணி முதல் பட்டியல் வெளியீடு


சென்னை:குரூப் - 2 பதவிகளில், 2,269 காலிபணியிடங்களுக்கு, 2014 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்ற வர்களில், தகுதியானோரின் இறுதிப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ளது.

இதில், உதவியாளர் பணிக்கு, 1,365 பேர், அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எழுத்தர் பணிக்கு, 43 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர, உதவியாளர் பணிக்கு, சான்றிதழ் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், 43 பேருக்கு, வரும், 28ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

டெங்கு காய்ச்சலுக்கு சுய மருத்துவம் கூடாது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை


விருதுநகர்: டெங்கு காய்ச்சலுக்கு சுயமருத்துவம் செய்யக்கூடாது என, மாணவர்களிடம் வலியுறுத்தும்படி, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வகுப்பறை மற்றும் கழிப்பறையில் தண்ணீர் தேங்கியிருந்தால், தலைமையாசிரிடம் கூறி அகற்ற வேண்டும். குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டியை மூடிவைப்பதன்மூலம், கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க முடியும்.
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் அதை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். பின்னர் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாறாக, சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.காலை இறைவணக்கத்தின்போது வாரத்தில் 3 நாட்கள் அனைத்து மாணவர்களும் இதுகுறித்து சுய உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். திருப்பூர், திருச்சி, சேலம், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் சென்னையின் முதன்மைக்கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

டி.இ.ஓ., பதவி உயர்வில் விரும்பிய இடங்கள்! கல்வித்துறை திடீர் 'கரிசனம்'

மதுரை:கல்வித் துறையில் மாநில அளவில், 70க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருந்தன. டி.இ.ஓ., பதவி உயர்வு 'பேனல்' ரெடியாக இருந்தபோதும் காரணமே தெரியாமல் பதவி உயர்வு அளிப்பதில் இழுத்தடிக்கப்பட்டது. இதனால், டி.இ.ஓ., பதவியே கிடைக்காமல் தலைமையாசிரியர் பலர் ஓய்வு பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.


நேற்று முன்தினம் இரவு 52 பேருக்கு பதவி உயர்வு அளித்து கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால், 80 பேர் 'பேனலில்' இருந்தபட்சத்தில், 76 காலியிடங்களுக்கு 52 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதனால், மீதமுள்ள பலர், ஓய்வு பெறும் வயதில் உள்ளதால் அவர்களின் டி.இ.ஓ., கனவு நிறைவேறாமல் போயுள்ளது.வழக்கமாக, டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வின் போது, தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வடக்கிலும், வட மாவட்டத்தினருக்கு, தெற்கிலும் பணியிடம் ஒதுக்கி, அலைக்கழிப்பது கல்வித்துறையில், பல ஆண்டு வழக்கம். ஆனால், இந்தாண்டு பெரும்பாலும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் 'செலவில்லாமல்' பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

டிச.27-இல் "நெட்' தேர்வு


இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
 இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.

 நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கும் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது.
 இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும்.
 வரும் டிசம்பர் மாதத்துக்கான தேர்வை டிசம்பர் 27-ஆம் தேதி நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பையும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேதியும் விரைவில் வெளியிடப்பட உள்ளது என சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்


CLICK HERE CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) 2009 - FEB 2014


Type ur CPS No 
Type ur date of birth

Login

Click account slip
Select year 

Download ur account slip

தொடக்க கல்வி-டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் போன்ற தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...



தொடக்கக்கல்வி-ஊராட்சி/நகராட்சி/மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.08.2015 இல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர் பணியிடம் நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்


பி.எட். சேர்க்கை:கட்-ஆஃப் வெளியீடு: தரவரிசைப் பட்டியல்....CLICK HERE TO VIEW

பேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5 பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு


பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பவித்ரா உள்பட 5 மாணவர்கள் ஜப்பானுக்கு இலவச சுற்றுலாச் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.
 தொழில்பயிற்சிக்காக ஜப்பான் சென்று திரும்பியவர்களால் தொடங்கப்பட்டது "ஏபிகே- ஏஓடிஎஸ் தோசோகாய்' தமிழ்நாடு மையம். இந்த மையம் "ஹியோஷி கார்ப்பரேஷன்' என்ற ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுதோறும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த சில வாரங்களாக பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வந்தது. பின்னர், பரிசளிப்பு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் ஷெஜிபாபா வழங்கினார். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்த மாணவர்களை ஜப்பானுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி 2 வார கால சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கான செலவுகள் அனைத்தையும் ஹியோஷி நிறுவனம் ஏற்கிறது.

PFRDA ;ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் CPS பணத்தை , நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனங்கள் கையில் ஒப்படைப்பு!


Just as the country’s Employees Provident Fund Organisation (EPFO) started investing a small part (Rs 5000 crore) of its Rs 8.5 lakh crore corpus into equities, the Pension Fund Regulatory and Development Authority 
(PFRDA) is gearing up to allow private-sector fund managers to manage its Rs 88,000 crore assets.


In an interview with CNBC-TV18, PFRDA Chairman Hemant Contractor told Sapna Das the organization had made a pitch to the Finance Ministry in the regard.

 The recommendation to allow private sector fund managers to manage its corpus was made by the Bajpai committee, Contractor said. “We see some merit in that recommendation and forwarded it to the government. It is currently engaging its attention,” he said.

Currently, eight managers (including private sector managers such as ICICI, Kotak, Reliance, HDFC and Birla Sun Life) manage the Rs 6,300-crore portion made up by investments from private sector employees into the National Pension Scheme. But only LIC, SBI and UTI manage the remaining assets, made up from investments from central and state government employees.

2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்


CLICK HERE CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) 2009 - FEB 2014


Type ur CPS No 
Type ur date of birth

Login

Click account slip
Select year 

Download ur account slip

பி.எட். கட்ஆப் மதிப்பெண் வெளியீடு


பி.எட். படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்களை, கல்வியியல் துறை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் www.ladywellingtioniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் பி.எட், படிப்பு 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங் மாணவர்களும், பி.எட். படிக்க இந்தாண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர் விடுதியில் 3 மாதங்களுக்கு அரசியல்வாதி பணியாற்ற வேண்டும்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் 3 மாதங்கள் பணியாற்ற வேண்டும் என அரசியல்வாதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சௌகார்பேட்டையில் உள்ள விதிமீறல் கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றபோது, சீனிவாசலு என்ற அரசியல்வாதி, துருவாசன், கண்ணதாசன் ஆகிய இரண்டு வழக்குரைஞர்கள் அதைத் தடுத்தனராம்.

இதையடுத்து அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Group 2A இரண்டாம் கட்ட கலந்தாய்வு பட்டியல் மற்றும் மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

7-வது ஊதியக்குழுவில் - 33 வருடம் பணி அல்லது 60 வயது முதிர்வு இதில் எது முதலில் வந்தாலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு முடிவு - இந்த முடிவுக்கு ஊழியர் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.


7th Central Pay Commission – Regularisationof Retirement Age?(completing 33 years of service or at the age of60, whichever comes first)One more recommendation which is said to be an important one, is the regularisation of retirement age for the Central Government Employees. 

The Commission may recommendthat an employee should retire after completing 33 years of service or at the age of 60 whichever comes first. For instance, if an employee joins a central government establishment at the age of 23, his retirement age will be 56. If this recommendation is true, it will definitely create panic among the employees and it will not be a wise decision by the pay commission. All Federations and Associations will strongly oppose these type of recommendations… 

TET அறிவிப்பு எப்போது....


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பப் போட்டி


பள்ளி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்ப போட்டி நடைபெறுகிறது. சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.

இதில், கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புக்கான மாதிரியுடன் தனியாகவோ, குறைந்தபட்சம் மூன்று நபர்கள் கொண்ட குழுவாகவோ இணைந்து பங்கேற்கலாம்.

இதில் தேர்வு செய்யப்படும் மூன்று சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.75 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறவர்கள் பள்ளி, கல்லூரி முதல்வர் அனுமதியுடன் பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 10-ஆம் தேதியாகும். மேலும் விவரங்கள் அறிய 94442 06191, 98402 79575, 044-22759200, 22750007 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.