Breaking News

பிப்ரவரி மாத நாட்குறிப்பு

3.2.15 - தை பூசம் - மதவிடுப்பு

7.2.15 -ஆசிரியர் குறைதீர்க்கும் நாள்
17.2.15 - மகாசிவராத்திரி - மதவிடுப்பு
18.2.15 - சாம்பல் புதன் - மதவிடுப்பு
21.2.15 - தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்புகளுக்கு குறுவளமைய பயிற்சி வகுப்பு. Topic :
Pri -Enriching constitutional and cultural values,
Upp -Environmental Science.

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) /Family Pensioners


CLICK HERE- List of Additional Hospitals covered under this Scheme – Approved – Orders – Issued.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டிய உதவித் தொகை வலைதளங்கள்.


      கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. 
 
         எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். இத்தளங்களை ஆராய்வதன் மூலம் கல்வி உதவித்தொகை சம்பந்தமான பல அரிய, உபயோகமான தகவல்களைப் பெறலாம்.
                                                www.scholarshipsinindia.com

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி இந்த வலைத்தளம் பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதைத்தவிர பரிசுகள், போட்டிகள், ஆய்வு படிப்புகள், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் ஆகியவைப் பற்றிய தகவல்களையும் தருகிறது. இந்த வலைத்தளத்தில் தகவல்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. மேலும் இதில் நிபுணர்களின் கேள்வி-பதில் பகுதியும் அடங்கியுள்ளது.

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வு: புதிய முறையில் வடிவமைப்பு: தேர்வுத்துறை உத்தரவு


மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகளுக்கு முதன்மை விடைத்தாள் 30 பக்கங்களைக் கொண்ட கோடிட்ட தாளாக இருக்கும். இதில், HSC-LANGUAGE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூடுதல் விடைத்தாள்களும் கோடிட்ட விடைத்தாள்களாகவே வழங்கப்படும்.

கணக்கியல் தேர்வுக்கு 46 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். இதில் 1 முதல் 14 பக்கங்கள் கோடிடப்படாமலும், 15 முதல் 46 பக்கங்கள் கோடிடப்பட்டும் இருக்கும். இதில், HSC- ACCOUNTANCY எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தமிழகம் முழுவதும் ஏஇஇஓக்கள் பணிக்கு பட்டியல் தயாரிப்பு- தொடக்க கல்வித் துறை உத்தரவு


அங்கன்வாடி நியமன வழக்கு: பெஞ்சுக்கு மாற்றி உத்தரவு


தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி தடை விதித்துள்ள நிலையில் விசாரணையை பெஞ்ச்சிற்கு மாற்றி உத்தரவிட்டார்.


திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப 2014ல் அறிவிப்பு வெளியானது. சில வழிகாட்டுதல்களை பின்பற்றி நியமனம் மேற்கொள்ள 2013 ஆக., 28ல் அரசு உத்தரவிட்டது. அதில், 'மாவட்ட வாரியாக, நேர்காணல் மூலம் மட்டுமே பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்' என உள்ளது. தற்போதைய பணி நியமன நடைமுறையில் மாவட்டந்தோறும் எத்தனை பணியாளர்கள் நியமிக்க உள்ளனர்? இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுமா? என தெளிவுபடுத்தவில்லை. பொது அறிவிப்பு மூலம்தான் அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதை பின்பற்றவில்லை.மேலும் அந்தந்த இடத்தில் வசிப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்பது இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரானது. அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். பணி நியமனம் மேற்கொள்ள 2014 நவ.,18ல் தனி நீதிபதி தடை விதித்தார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.

200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்


தமிழக அரசின் அரசாணைப்படி, பார்வையற்ற முதுநிலைப் பட்டதாரிகள் 200 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பார்வையற்ற மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத் தலைவர் என். செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசாணை எண்.260-இல் குறிப்பிட்டுள்ளபடி, 200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பார்வையற்ற பட்டதாரி மாணவர்களைப் பணியமர்த்த வேண்டும்.

10,000 காலிப் பணியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி.


நிகழாண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.


அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நிகழாண்டுக்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தேர்வாணைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று தேர்வு அட்டவணையை வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

TNPSC ANNUAL PLANNER - 2015

SSLC PLUS TWO தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு - சென்னை மாநகராட்சி


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 படித்து, பொதுத்தேர்வில் மாநகராட்சி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
இந்தப் பரிசுகள் ரூ. 5,000, ரூ. 3,500, ரூ. 3,000 என்ற அளவில் இருந்தது. இந்த பரிசுத் தொகை இப்போது ரூ. 10 ஆயிரம், ரூ. 9 ஆயிரம், ரூ. 8 ஆயிரம் என உயர்த்தப்படுகிறது.

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பு உயர்வு:ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பை, இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

அங்கீகாரம்:தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லுாரிகள் சங்கத்தின் செயலர் விஜயகுமார், தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 670 கல்வி நிறுவனங்கள், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தி வருகின்றன. இந்த கல்லுாரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றுள்ளன.ஆசிரியர் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம், நடைமுறைகள் தொடர்பான புதிய விதிகளை, தேசிய கவுன்சில் கொண்டு வந்துள்ளது. கடந்த மாதம், 1ம் தேதி, அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

M.ED க்கு 3 வது ஊக்க ஊதியம் வழங்காததால் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்ஆஜராக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.


ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் பாலசவுந்தரி. இவருக்கு பி.எட் மற்றும் எம்.ஏ. படிப்புகளுக்காக ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து எம்.எட். படிப்புக்காக 3 ஆவது ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தார். அந்த கோரிக்கையை, பரமக்குடி மாவட்டக்கல்வி அதிகாரி நிராகரித்தார். இதை எதிர்த்து பாலசவுந்தரி மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி, பாலசவுந்தரிக்கு 3 ஆவது ஊக்க ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 8 வாரத்துக்குள் ஊக்க ஊதிய உயர்வை வழங்க 2014 செப்.18-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஆய்வு


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.நடப்பு ஆண்டு பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 19-இல் தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் என 483 பள்ளிகளில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வை 47 ஆயிரத்து 186 மாணவ, மாணவியரும், பிளஸ் 2 தேர்வை 275 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 38 ஆயிரத்து 106 மாணவ, மாணவியரும் எழுத உள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 120 மையங்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு 91 மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி


அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (ஏஐபிஎம்டி) விண்ணப்பிக்க சனிக்கிழமை (ஜன.31) கடைசித் தேதியாகும். இதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீதத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு:அரசு தேர்வு துறை அறிவிப்பு'


'பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல், 7ம் தேதிவரை, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன் - லைனில் விண்ணப்பிக்க தவறிய, தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான, 'தத்கல்' கீழ், ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அரசு தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பிப்., 5 முதல், 7 வரை நேரில் சென்று, ஆன் - லைனில் விண்ணப்பிக் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும், அனைத்து தனித்தேர்வர்களுக்கும், சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.தனியார், 'பிரவுசிங் சென்டர்'களில் விண்ணப்பிக்க முடியாது. அரசு தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை, 'www.tndge.in' என்ற இணையதளத்தில் அறியலாம். 'எச்' வகை தனித்தேர்வர்கள், ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய் கட்டணம் மற்றும் இதர கட்டணம், 35 ரூபாயும், 'எச்.பி.,' வகை நேரடி தனித்தேர்வர்கள், 150 மற்றும் 37 ரூபாய் என, 187 ரூபாயும் கட்ட வேண்டும்.

NMMS TENTATIVE ANSWER KEYS FOR 2015 (private)

NEW SIMPLE IT XL CALCULATION FORM

INCOME TAX SLABS FOR FY 2014-15.....TAXATION - SECTIONS AND DEDUCTIONS AVAILABLE


மாணவர்களை அவர்களின் தனிக் குறியீடு எண் (EMIS UNIQUE ID) கேட்டு வற்புறுத்தக் கூடாது -பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறுத்தல்


தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.


இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் / தனித் தேர்வர்களும் பயன்பெறும் வகையில் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும்,
விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு

சகோதர, சகோதரிகளே, 21.8.2014 ஆம் தேதியன்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிப்பு எண் 06/2014 -ல்ஆதிதிராவிட நலத்துறையின் கீழ்உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற SC & SCA ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும் பிரமலை-கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பிரமலை-கள்ளர் சமுகத்தினருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும்என்றும் அறிவிப்பு வெளியானது.



ஆனால் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இது நாள் வரை ஆதிதிராவிட நலப்பள்ளிகள் மற்றும் கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 669+64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டும்இது வரை நிரப்பப்படவில்லை. 

50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது?

 50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்புவிரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிராம நிர்வாக அலுவலர்

2,234 காலிப்பணியிடங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி பணி ஒதுக்கீடு ஆணை நேற்று 103 பேர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டது.

கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு.

பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக கல்வித்துறை அதிகாரிகளின்நெருக்கடிக்கு ஆளாவதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதற்காக விடுமுறை தினத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், பள்ளி வேலைநாட்களில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை வகுப்புகளை நடத்தவும் தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். தேர்ச்சி சதவீதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் சந்திரசேகர் கூறியதாவது:

ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.


பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள்என, பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டுதிட்டங்களிலும் சேர்த்து, இப்பயற்சிக்காக, ஆண்டுதோறும், பல கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் மட்டும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 90 லட்சம் ரூபாயும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் கீழ் 96 லட்சம் ரூபாயும் ஆசிரியர் பயிற்சிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது.

 

1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம்

2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000


3).ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.

4.)குழந்தையின் 21 வது வயதில் கணக்கை முடிக்கலாம்

5. )Nomination வசதி கிடையாது .

6.)ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூபாய் 1000 கண்டிப்பாக முதலிடு செய்ய வேண்டும்

7)இந்த ஆண்டு வட்டி 9 .1%

20% கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை: ஆய்வு

தமிழகத்தில், கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 20 சதவீத பள்ளிகளில்,மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன் கீழ், ஒவ்வொரு பள்ளிகளுக்கும் மாணவர் ஆசிரியர் விகிதம், வகுப்பறை ஆசிரியர் விகிதம், பள்ளி மைதானம், சுற்றுச்சுவர், பொது கழிவறை, பெண்களுக்கான கழிவறை, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கட்டாயம் இருப்பது அவசியம்.

பள்ளிகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பின் கீழ் அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.ஏசர் அமைப்பு சார்பில், கிராப்புற பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, 2014ம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 9.9 சதவீத பள்ளிகளில், குடிநீர் தொட்டி

வருமான வரி - 2014-15ம் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் சார்பான நிதித்துறையின் வழிக்காட்டு நெறிமுறைகள்

NEW IT XL CALCULATION FORM

எங்கே செல்லும் இந்த பாதை..!?-மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வரும் இளைய சமுதாயம்! பெற்றோர்கள் அச்சம்


கரூர் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் வந்த பள்ளி  செல்லும் மாணவன் ஒருவன், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி  விழுந்தது பொதுமக்களிடையே பரபரப்பையும், கவலையையும்  ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த  ஆட்டோ டிரைவரின் மகன் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார்  பள்ளியில் படித்து வருகிறான். 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன்,  அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் நண்பர்களுடன் மது  அருந்தியுள்ளான். 

81 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்


தமிழகத்தில்கிராமப்பகுதிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களில்,81 சதவீதத்தினருக்கு அடிப்படைகணித திறன் இல்லை என்று ஆய்வுகளின் முடிவில்கண்டறியப்பட்டுள்ளது.

'ஏசர்அமைப்பின் சார்பில்தமிழகத்தில்ஒன்று முதல் எட்டாம்வகுப்பு வரை படிக்கும்கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம்குறித்து ஆய்வு செய்யப்பட்டதுஇதன் படிதமிழ் பாடத்தைபொறுத்தவரையில்எழுத்துவார்த்தைவாக்கியம்பத்தி எனவாசிப்பு திறன் கொண்ட மாணவர்களை தனித்தனியாக ஆய்வுசெய்துள்ளனர்இதில்ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளமாணவர்களின், 64 சதவீத பேருக்கு தமிழ் வாசிப்பு திறனும்,

CPS - மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் போது மத்திய நிதியமைச்சரின் பேச்சு - நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை நிறைவேற்ற நிர்பந்தம் செய்ய வில்லை -இது மத்திய அரசின் திட்டம் என தகவல்


The State Governments were not obliged to join. They joined voluntarily. Only for the Central Government employees, it is mandatory from 1.1.2004.

   
                                   
                                                                         135-PAGE
THE MINISTER OF FINANCE (SHRI P. CHIDAMBARAM): Mr. Chairman, I amgrateful to the hon. Members, 15 of them, who have participated in this discussion on the Pension Fund Regulatory and Development Authority Bill.
Sir, this Bill was first introduced in 2005. It was once reported by the Standing Committee on Finance chaired, at that time, by Maj. Gen. (Retd.) Khanduri. The Standing Committee favourably reported the Bill. There were one or two dissent notes, mainly from the Left Parties. That Bill lapsed with the dissolution of the
Lok Sabha.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஓன்றிய TNGTF பொறுப்பாளர்கள் ஒன்றிய AEEO உடன் சந்திப்பு.





அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இனி ஆய்வேடுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா


 
  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வேடுகளும், சமர்பிக்கப்படும் ஆய்வேடுகள் நகலெடுத்து பயன்படுத்தும் முயற்சியை தடுக்கும் வகையில், பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்படும் அனைத்து ஆய்வேடுகளும் சோத்சங்கா திட்டத்தின் மென்பொருள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் - இன்புளூயன்சியா எச்1 என் 1





பன்றிக்காய்ச்சல் - இன்புளூயன்சியா எச்என் 1
எச்என் 1 என்ற வைரசால் தாக்கப்படும்  இன்புளூயன்சியா காய்ச்சல்  
பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

வகைகள்:
இது 3 .பி.சிஎன்று 3 வகைப்படுகிறது.
இவை அனைத்தும் வைரஸ்களால் ஏற்படுகிறது.

போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்: தேர்வு முறையிலும் மாற்றம்


அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள்முன்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலமாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில், சிறப்பாசிரியர்களை இனிமேல் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. 

“வாட்ஸப்” சிம் கார்டு அறிமுகம்!

150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம் உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி ‘வாட்ஸ்அப்’ சேவையை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



சமூக வலைதளமான வாட்ஸ் அப்-க்கு உலகெங்கும் 700 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், அவர்களுக்காக தற்போது வாட்சிம் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது இத்தாலியை சேர்ந்த ஜீரோ மொபைல் நிறுவனம்.

600 ஆசிரியர் பயிற்றுநர்கள் அதிரடியாக இடமாற்றம்; ஆணையை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம்



அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்


சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம்  சார்பில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், தொழிலாளர்கள் தங்களுடைய  நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள் ஏதேனும் இருந்தால் கூறலாம். 


அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான கூட்டம், வரும் 10ம் தேதி, காலை 10 மணி முதல் 1 மணி வரை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வைப்பு  நிதி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. தொழிலாளர்கள் தங்களுடைய பெயர், கணக்கு எண், பி.எப். எண் மற்றும் அவர்களுடைய குறைகளை மக்கள்  தொடர்பு அதிகாரியிடம் இந்த மாதம் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ளும்போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் - அறிவுரைகள் வழங்கி இயக்குனர் அறிவுரைகள்



anna university results published - for the examination November /December 2014



                      Anna University has announced the November December 2014 Results for UG.
                                        November / December 2014 UG Results 
Anna University November  / December 2014 UG  Results - GRADE SYSTEMS
Affiliated Colleges- UG - Results of Nov / Dec 2014 Examinations (Chennai&Madurai)

click here to view results anna univ link 1

click here to view results anna univ link 2
click here to view results anna univ link 3

தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு 2014ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்


DEE - 2014 - FINAL TEACHING GRANT RELEASE FOR AIDED PRIMARY & UPPER PRIMARY SCHOOLS REG INSTRUCTIONS CLICK HERE...

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு தேர்வுத் துறை இயக்குனருடன் 21.1.15 அன்று சந்திப்பு


தேர்வுத்துறை இயக்குனருடன் சந்திப்பு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுடன் 21.1.15 அன்று சந்திப்பு


                                        தொடக்க கல்வி இயக்குனருடன் சந்திப்பு

இணை இயக்குனருடன் (நிர்வாகம்) சந்திப்பு

இணை இயக்குனருடன் (நிதி உதவிப் பள்ளி) சந்திப்பு