Breaking News

மூன்று நிலவின் நிழல்கள் ஒன்றாக பூமியின் நிலவின் அருகே தெரியும் அரிய நிகழ்வு

வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒன்றாக இணையும்போது இன்றிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஜூபிடர் பிரகாசமானதாகவும், மிகப்பெரியதாகவும் தெரியும். 

இந்த அற்புதமான காட்சிகள் இன்று இரவு முதல் தொடங்கும். வானத்தில் போதுமான அளவுஇருட்டாகியதும், முழு நிலவின் இடதுபக்கத்தில் ஒரு புள்ளியில் இருந்து நேரடியாகபிரகாசமான ஜூபிடரின் ஒளி இருப்பதை நாம் துல்லியமாக பார்க்க முடியும்.

இந்த இரண்டு கிரகங்களும் மிக நெருக்கமாக இருப்பதை போல் தெரிந்தாலும், அதன் இரண்டுக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஆனால் இதன் ஜோடிகள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும். மேலும், அவைகளை கவனித்துப் பார்த்தால், இரண்டு கிரகங்களும் இரவு முழுவதும் ஒன்றாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்யும். 2015 ஆம் ஆண்டில், சூரியன், பூமி மற்றும் ஜூபிடர் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரிசையாக செல்லும் காலம் இது, மேலும்வியாழனானது பூமிக்கு நெருங்கமாகவும் உள்ளது.அதனால் தொலைநோக்கிகள் மூலம் ஜூபிடரை பார்த்தால் மிகப்பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும். மாலை 6:22 மணிக்கு ஜுபிடர் வானில் தோன்றுவதை பார்க்கலாம். 

ஆனால் ஜுபிடரின் டிஸ்கில் காலிஸ்டேரின் நிழல் எப்பொழுது விழுகிறதோ, அப்போது தான் அதன் நிழல் தெளிவாக தெரியும், அதாவது இரவு 7.11 மணிக்கு தெளிவாக நிலவில் தெரிவதை பார்க்கலாம். இந்த காலிஸ்டேர் நிலவு, ஜுபிடரின் நிலவின் மூன்றாவது பெரிய நிலவாகும். இரவு 8.35 மணிக்கு காலிஸ்டேரின் நிழலும், Io நிழலும் ஒன்றாக சேரும். இந்த Io,பூமியின் நிலவை விட சிறியளவு பெரியதாக இருக்கும். இரவு 10.27 மணிக்கு மூன்றாவது நிழலான யூரோபா நிழல் மற்ற இரண்டு நிழல்களுடன் சேரும். அதன் பிறகு இரவு 10.52 மணி வரை இந்த மூன்று நிழலும் பூமியின் நிலவில் அருகில் ஒரே நேரத்தில் சுமார் 25 நிமிடங்களுக்கு தெரியும். அதன் பிறகு Io நிழல் அதிக நேரம் நீடித்திருக்காது. 

இந்த அரிய நிகழ்வானது 2032ம் ஆண்டில் தான் மீண்டும் வானில் தெரியும். இதை பார்க்க தவறாதீர்கள்.