பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுப் பணிகளுக்கான கையேடு வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகளும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாலையில், சி.இ.ஓ.க்கள், டி.இ.ஓ.க்களுக்கென தனியாகக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சி.இ.ஓ., டி.இ.ஓ.க்களுக்கு வழங்கப்பட்ட கையேடு தொடர்பாக 40 வினாக்கள் கொண்ட தேர்வை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் திடீரென நடத்தினார்.
இந்தத் திடீர் தேர்வு அதிர்ச்சியளித்தாலும், மகிழ்ச்சியுடன் அனைவரும் தேர்வில் பங்கேற்றதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். வழக்கமாக கையேடுகளை அதிகாரிகள் முழுவதுமாகப் படித்துப் பார்ப்பதில்லை. எனவே, அனைவரும் இந்தக் கையேடுகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தத் தேர்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பெரும்பாலானோர் 30-க்கும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான மேற்பார்வை அதிகாரிகளுக்கே தேர்வு நடத்தப்பட்டுள்ளது பள்ளிக் கல்வி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது