Breaking News

ரூ.3 லட்சம் வரையில் வருமானவரி விலக்கு நிதி அமைச்சகம் தகவல்


 மத்திய அரசு வரும் 28ம் தேதி 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் கருத்தில் கொண்டு மாத சம்பளம் வாங்குபவர்களின் வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தற்போது ரூ.2.5 லட்சம் வரையில் மாத சம்பளம் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டியது இல்லை. இந்த வரம்பை குறைந்தபட்ச ரூ.3 லட்சம் என்ற அளவிற்காவது உயர்த்தி அதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.