Breaking News

தொற்றுநோய் தாக்குதல் எதிரொலி: மாணவர்கள் நலன் காக்க கல்வித்துறை புதிய திட்டம்

தொற்றுநோய் தாக்குதலில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளின் உடல்நலம் காக்க கல்வித்துறை புதிய முயற்சி எடுத்துள்ளது. மின்னஞ்சல் வழியாக ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தினமும் தகவல்களைப் பெற்று, சுகாதாரத் துறை மூலம் தேவையான மருத்துவ ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது.


பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளை தொற்று நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத் துறையுடன் இணைந்து செயலாற் றும் வகையில் இத்திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை வகுத்துள் ளது. இதன்படி, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு பிரத்யேக மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும், தங்களது பள்ளியில் காய்ச்சல் காரணமாக விடுப்பு எடுத்துள்ள மாணவர்கள், காய்ச்சல் அறிகுறியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் குறித்த தகவல்களை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு தினமும் காலை 11 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘கோவை மாவட்டத்தில் இதற்கான உத்த ரவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி நேற்று பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். மாவட்டத்தில் 537 அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், 1137 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும் உள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2.69 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிகளில் படித்து வருகின்ற னர்.
schoolmonitoring.fever@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அனைத்துப் பள்ளிகளும் தங்களது மாணவர்களின் உடல்ந லன் குறித்த தகவல்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் அலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை பதிவு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வட்டார வள மைய பயிற்றுநர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து இந்த தகவல்கள், மாவட்ட நிர்வாகத் துக்கும், சுகாதாரத் துறைக்கும் அனுப்பப்படும். அதன் பின்னர், அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்படும்’ என்றனர்.