Breaking News

கிரிமினல் வழக்குகளில் சிக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் கல்லூரி முதல்வர்களுக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவு:

வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு, கிரிமினல் வழக்குகளில் சிக்கும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் வன்முறை சென்னை மாநகரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், கல்லூரிக்குள்ளும், வெளியேயும் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். பஸ் பயணத்தின்போது வன்முறையில் ஈடுபடுவது. பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால், பொதுமக்கள் பஸ்களில் ஒரு வித அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் உள்ள கல்லூரிகளின் முதல்வர்களுடன், சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டத்தில், மாணவர்களின் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் போலீஸ் தரப்பில் வழங்கப்பட்ட விதிமுறைகளை கொண்ட சுற்றறிக்கையை தீவிரமாக அமல்படுத்தவேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். அடையாள அட்டை பின்னர் கீழ் கண்ட கட்டுப்பாடுகளை கல்லூரிகளில் தீவிரமாக அமல்படுத்தும்படி, முதல்வர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அவற்றின் விவரம் பின்வருமாறு:-மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போது, அந்த அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.50 மாணவர்களுக்கு ஒரு ஆலோசகர் நியமிக்க வேண்டும். அந்த ஆலோசகர் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்டால், அதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை கல்லூரிக்குள்ளும், மாணவர்கள் விடுதியிலும் வெளியாட்கள் உள்ளனரா? ஆயுங்கள் எதுவும் உள்ளதா? என்பதை முதல்வரும், விடுதி காப்பாளரும் தினமும் ஆய்வு செய்யவேண்டும். பஸ் மற்றும் பஸ் நிலையத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுக்க, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் அடிக்கடி கலந்தாய்வுகள் நடத்தவேண்டும். அப்போது, பஸ் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. பெண்களை கேலி செய்யக்கூடாது. பிற கல்லூரி மாணவர்களுடன் மோதலில் ஈடுபடக்கூடாது என்பது உட்பட பல அறிவுரைகளை வழங்கவேண்டும்.சட்டவிரோத செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதன் விவரங்களை கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பி வைப்பார்கள். சம்பந்தப்பட்ட மாணவன் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.பஸ் தினம் தடை கல்லூரி நுழைவு வாயில், கல்லூரிக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தம், போக்குவரத்து சிக்னல்களில் போலீஸ் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அதன் மூலம் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் தினத்தை கொண்டாட தடை செய்யப்பட்டுள்ளது. அது உடனடியாக அமலுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.