Breaking News

SSTA இடைநிலை ஆசிரியர் வழக்கு நீதிமன்ற ஆணையுடன் முதலமைச்சர் தனிபிரிவில் மனு கொடுக்க தீர்மானம் !!

வரும் வாரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற அசல் ஆணை கிடைத்தவுடன் SSTA மாநில அமைப்பின் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள உண்மையான எண்ணிக்கை மற்றும் தற்போது ஊதியம் வழங்கினால் ஆகும் ௯டுதல் செலவு பட்டியலில் ,நாம்

அனைவரும் +12 ம் வகுப்பு முடித்து தான் பணிபுரிகிறோம் என்ற விளக்கம் (ஆதாரம் ),தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களில் சுமார் 75% பேர் கிராம புறத்தில் தான்

பணிபுரிகின்றனர் என்ற விபரங்களுடன் இடைநிலை ஆசிரியர்களில் 15% பேர் நகர்புறங்களில் பணிபுரிந்தாலும் அவர்களுக்கும் மத்திய அரசு ஊதியம் வழங்கப்படவில்லை என்ற விபரங்கள்களுடன் , முதலமைச்சர் தனிப்பிரிவு ,நிதி துறை செயலாளர் ,(செலவீனம் ) ,மற்றும் நிதித்துறை அமைச்சர் ,கல்வித்துறை செயலாளர் ,கல்வித்துறை அமைச்சர் ,தொடக்ககல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து நமக்கு வழங்கவேண்டிய நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்