Breaking News

திறந்தநிலை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) ஏ. முகமது ஜாபர் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, முதுநிலை, இளநிலை, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் ஜனவரி 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன.
இப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டன. www.tnou.ac.in, www.schools9.com, www.indiaresults.com, www.examresults.com, www.vidhyavision.com  ஆகிய இணையதள முகவரிகளில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.