Breaking News

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மே 31-ம் தேதி கடைசி நாள்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறி விக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப் படிப்பு,
பட்ட மேற்படிப்பு ஆகிய கல்வி தகுதியுடைய, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 5 ஆண்டு கள் காத்திருப்போருக்கும் பதிவு செய்து ஓர் ஆண்டான மாற்று திறனாளிகளுக்கும் தமிழக அரசு வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித்தொகை வழங்குகிறது.
இதை பெறுவதற்கு தகுதியுள்ள நபர்கள் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவ லகத்துக்கு நேரில் வந்து விண்ணப் பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கெனவே உதவிதொகை பெற்றுவருபவர்கள் ஆண்டு தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து எந்தவொரு நிரந்தர பணியிலும் இல்லை என்பதற்கான சுயஉறுதி மொழி ஆவணம் அளிக்க வேண் டும். மேலும், பதிவு அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், விண்ணப்பம் பெற்றுக்கொண் டதற்கான ஒப்புகை சீட்டு ஆகியவற்றின் நகல்களை இணைத்து பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அளிக்க வேண் டும். சுய உறுதிமொழி ஆவணம் வழங்க தவறினால் உதவிதொகை தொடர்ந்து வழங்கப்பட மாட்டாது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை முடிவடையும் காலாண்டுக்கு உதவித் தொகை கோருபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை, வரும் மே மாதம் 31-ம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு அலுவலகத் தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.