Breaking News

அரசு உதவி பெறும் 50,000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை!


ஒவ்வொரு மாதமும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் போதே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.

பிரதி மாதம், 5ம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் 
சேர்க்கப்படும். ஆனால், இம்மாதம், நிதியாண்டு கணக்கு மார்ச், 31ல் முடிந்த பின், அரசு விடுமுறை நாட்கள் வந்ததால், ஏப்ரல் 6ம் தேதி தான், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் கிடைத்தது.இருந்தும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் இன்னும் சம்பளம் வழங்கவில்லை. இதனால், 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையில் விசாரித்த போது, 'சம்பளக் கணக்கு மற்றும் பட்டுவாடா அலுவலகத்துக்கு, நிதித்துறையில் இருந்து, இன்னும் ஊதியம் வழங்கும் உத்தரவு வரவில்லை. அதனால், சம்பளம் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. உயரதிகாரிகளிடம் பேசி வருகிறோம்' என்றனர்.