Breaking News

ஒரு மாணவருக்கு, ஒரு மரம்- திட்டத்தை நிறைவேற்ற உத்தரவு

நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி கல்லூரிகளில், அதிக அளவில் மரங்கள் நட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பசுமைத் தீர்ப்பாயம் சார்பில், பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,க்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில், ஒவ்வொரு கல்லூரியிலும் மரம் வளர்க்கும் திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாடத்திட்டம் கட்டாயம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, இந்தியாவிலுள்ள அனைத்து பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட, 706 பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கு, யு.ஜி.சி.,யிலிருந்து உத்தரவு ஒன்று வந்துள்ளது.

தமிழகத்தில், அண்ணா, சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவம், காமராஜர், பாரதிதாசன், அண்ணாமலை, மீன்வளம், தஞ்சை தமிழ்ப் பல்கலை உள்ளிட்ட, 51 பல்கலைகளின் உறுப்புக் கல்லூரிகளில், ’ஒரு மாணவருக்கு, ஒரு மரம்’ என்ற பசுமை திட்டம் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அண்ணா பல்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு, கல்லூரிகள் சார்பில், இலவச மரக்கன்றுகள் அளித்து, அதை கல்லூரிகளில் நட்டு, தாங்கள் படிக்கும் வரை பராமரிக்க உத்தரவிடப்படும். மேலும், கல்லூரிகளில், பசுமை குறித்த பாடத்திட்டம் ஒன்றும் இணைப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.