11-04-15 அன்று "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் "(ARGTA) விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் ASG கூட்ட அரங்கில் மாநில பொதுச் செயலாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ஹரிக்கிருஷ்ணன், மரியஆரோக்கியராஜ், முனியன், அய்யாக்கன்னு,கோவிந்தராஜ் ,சிவா ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து சிறப்புறையாற்றினார்கள்.
மாவட்ட அளவில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வல்லம் சிவா , செயலாளர் தியாகதுருகம் விஜயகுமார் ,பொருளாளர் திருக்கோவிலூர் மதுசூதனன் ,மகளிரணி செயளாலர் விக்கிரவாண்டி பானு,முதன்மைச் செயலாளர் கண்டமங்கலம் கோவிந்தராஜீ, துனைத்தலைவர்கள் மைலம் தட்சணாமூர்த்தி ,கோலியனூர் அய்யாக்கன்னு,திருக்கோவிலூர் சந்தியாகுசிங்கராயன்,வானூர் ஆல்பின்ரெஜில்,துனைச்செயலாளர்கள் ஒலக்கூர் கணபதி,திருக்கோவிலூர் ஏழுமலை,திருவெண்ணைநல்லூர் சிவராமன்,உளுந்தூர்பேட்டை ஐயப்பன் ,மன்டலத்தலைவர்கள் கண்டமங்கலம் கோவிந்தன் ,வானூர் ராஜிவ்காந்தி,உளுந்தூர்பேட்டை அரசு,ரிஷிவந்தியம் ராஜமாணிக்கம் ,மகளிரணி துணைச் செயலாளர் கோலியனூர் விஜயா, மாவட்ட செய்திதொடர்பாளர் கண்டமங்கலம் மணிகண்டன் ஆகியோர் தோர்ந்தெடுக்கப்பட்டனர்.#நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள். 1.1385 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய வேண்டுகிறோம்.2.மூன்று வருட பணிமாறுதலை திரும்ப பெறவேண்டுகிறோம்.3.பழைய படி BRCயில் Supervisor, BRTE,CRTE நியமிக்க வேண்டும்.4.FTA. வை ₹2000 மாக உயர்த்த வேண்டும்.5.வெளிமாவட்டத்திற்கு கட்டாய பணிமாறுதல் அளித்ததை திரும்ப பெற வேண்டும்.6.CPS ஐ இரத்து செய்து GPF ஐ நடைமுறை படுத்த வேண்டும்.7.நிலுவையில் உள்ள TA /DA உடனடியாக வழங்க வேண்டும்.8.BRC செயல்பாடுகளுக்கு தேவையா அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர வேண்டுகிறோம் .