பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை
இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 24ம் தேதி, ஒருநாள், நாடு முழுவதும்,
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க, சேலம்
மாவட்ட தலைவர் சுவாமிநாதன் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியின் துணை
வங்கிகள், 3,000க்கும் மேற்பட்டவை உள்ளன. இவை, 'சமஸ்தானம்' காலத்தில்,
அந்தந்த எல்லைக்கு உட்பட்ட மக்களின் தேவையை நிறைவேற்றவும், சேவையாற்றவும்
உருவாக்கப்பட்டன; பின், அரசுடைமை ஆக்கப்பட்டன.
மக்களின் தேவையறிந்து உருவாக்கப்பட்ட, ஸ்டேட்
பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப்
டிகானிர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட, பல துணை வங்கிகளை, பாரத ஸ்டேட் வங்கியுடன்
இணைக்க முயற்சி நடக்கிறது; அதை செய்யக் கூடாது.அப்படி செய்வதால், வங்கியின்
முக்கியத்துவமும், வங்கி துவங்கப்பட்ட நோக்கமும் இல்லாமல் போய்விடும்.
வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, நல்ல நிலையில் லாபத்தில்
இயங்கும் துணை வங்கிகளை இணைக்க வேண்டிய அவசியமோ, கட்டாயமோ கிடையாது.