Breaking News

ஜூலை 1ல் கவுன்சலிங்: ஆசிரியர் பயிற்சி பள்ளி சேர்க்கை

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மொத்தம் 412 இயங்கி வருகின்றன. இவற்றில் 15000 இடங்கள் உள்ளன.  இவற்றில் 2300 இடங்கள் அரசு ஆசிரியர் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில்  இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த மாநில ஆசிரியர்  கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்(எஸ்இஆர்டி) முடிவு செய்துள்ளது. சேர்க்கை விண்ணப்பங்கள் மே மாதம் 14ம் தேதி  வினியோகிக்கப்பட்டன. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 4ம் தேதி வரை பெறப்பட்டன. இதுவரை 3350 பேர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்வதற்காக  விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்கள் 22ம் தேதி வெளியிட மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு  செய்துள்ளது. இதையடுத்து, ஜூலை 1ம் தேதி மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஒற்றைச் சாளர முறையின்(கவுன்சலிங்)  கீழ் மாணவ மாணவியர்  தேர்வு செய்யப்படுவார்கள்.