தமிழகத்தில் உள்ள
தனியார் பள்ளிகளை கட்டப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஓராண்டு கால அவகாசம்
அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து
தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, ஓராண்டு கால அவகாசம் அளித்து சென்னை
உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், புதிய சட்டம்
கொண்டு வருவதற்கான உயர்மட்டக் குழுவை ஒரு மதத்துக்குள் அமைக்க வேண்டும்.
உயர் மட்டக் குழு 6 மாதத்துக்குள் புதிய வரைவு கொண்டு வர வேண்டும். பொது
மக்கள் கருத்தை கேட்ட பிறகு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.வேலு தொடர்ந்த பொது நல வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.