Breaking News

Showing posts with label கணிதம். Show all posts
Showing posts with label கணிதம். Show all posts

ஆசிரியை மீது ஆசிட் வீசிய பள்ளி முதல்வர்... சென்னையில் கொடூரம்


சென்னை வளசரவாக்கத்தில் ஆசிரியை மீது அவர் பணிபுரியும் பள்ளியின் முதல்வரே ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பிற்கு ஆளான ஆசிரியையின் பெயர் மஞ்சு சிங் என்பதாகும். இவர் வளசரவாக்கத்தில் உள்ள சியோன் கிட்ஸ் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுக்கச் சென்றார். அப்போது ஆசிரியை மஞ்சு மீது திராவக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திராவகம் வீசியதாக பள்ளி முதல்வர் ஃபுளோரா, அவரது மகள் மற்றும் மகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கணிதப் புதிர்கள்

              

1. விமானப் பயணம்
ஒரு விமானம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு 1 மணி 20 நிமிடங்களில் சென்று சேர்கிறது. ஆனால், அதே ஊரிலிருந்து திரும்பி வருவதற்கு 80 நிமிடங்களே ஆகிறதாம். இது எப்படி நடக்கும்?
2. அன்பளிப்பு
இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாகவே 150 ரூபாயே இருந்தது. இது எப்படி சாத்தியம்?
3. இரண்டு இலக்கங்கள்
இரண்டு இலக்கங்களைக் கொண்டு எழுதக்கூடிய மிகச் சிறிய முழு எண் என்ன?
4. 0 முதல் 9 வரை பத்து பல வகை எண் முறை இலக்கங்களில் எல்லாவற்றையும் பயன்படுத்தி 1யை கொண்டு வர முடியுமா?
5. ஐந்து 9களைக் கொண்டு 10யை எழுத முடியுமா?
6. நான்கு வழிகள்
ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு 100யை கொண்டு வருவதற்கான நான்கு வெவ்வேறு வழிகளைக் காட்டுங்கள்.
7. நான்கு 1களைக் கொண்டு எழுதக்கூடிய மிகப் பெரிய எண் எது?
8. கடிகாரம்
வட்ட வடிவ கடிகாரத்தை பார்த்திருக்கிறீர்கள் தானே. அந்த கடிகாரத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அதை 6 துண்டுகளாகப் பிரிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு துண்டிலும் கிடைக்கும் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை ஒரே மாதிரி வர வேண்டும். உங்களுடைய சாமர்த்தியத்தை சோதிப்பதற்கான பரீட்சை இது.
9. எண்களின் சக்கரம்
கீழ்க்கண்ட சக்கரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். இதில் ஒவ்வொரு காலியிடத்திலும் 1 முதல் 9 வரை எண்களை எழுத வேண்டும். ஆனால் எந்த விட்டத்தின் திசையில் உள்ள மூன்று எண்களைக் கூட்டினாலும் அதன் கூட்டுத் தொகை 15 வர வேண்டும். இதை செய்து காட்டுங்கள்.


10. முக்காலி
ஒரு முக்காலியின் மூன்று கால்கள் வெவ்வேறு நீளமுடையதாக இருந்தாலும்கூட, முக்காலி சாய்ந்துவிடாமல் உறுதியாக நிற்குமென்று சொல்கிறார்கள். இது சரிதானா?
(நீங்கள் முக்காலியை பார்த்திருக்கிறீர்களா? நான்கு கால்களைக் கொண்டது நாற்காலி. மூன்று கால்களைக் கொண்ட அதன் மாற்று வடிவம் முக்காலி)

பதில்கள்

கணிதம் அறிவோம்

கார்ப்ரேகர் எண்

தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை   6174         என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு   நிலையில் 6174     என்ற எண் வரும் இந்த எண்ணை கார்ப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.
உதாரணம்;