அரசு பள்ளிக்கு தாமதமாக வந்த எட்டு
ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்' போட்டு முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை
எடுத்தார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்ய
அதிகாலையிலேயே புறப்பட்டுச் சென்றார்.
பள்ளி துவங்கும் முன்பே அவர் வந்துவிட்டதால்
அவர் முன்னிலையில்இறைவணக்க வழிபாடு நடந்தது. இதையடுத்து, பள்ளியில்
பணியாற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.அப்போது, ஏழு
ஆசிரியர்கள் வராமல் இருப்பதை, முதன்மை கல்வி அலுவலர் கண்டுபிடித்து, தலைமை
ஆசிரியரிடம் விளக்கம் கேட்டார்.அதற்கு, 'ஆசிரியர்கள் வராதது குறித்து, எந்த
தகவலும் இல்லை' என தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட, ஏழு ஆசிரியர்களும்,
பள்ளிக்கு தாமதாக வந்து சேர்ந்தனர். ஏழு பேருக்கும், ஒருநாள், 'ஆப்சென்ட்'
போட்டு, முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.இதேபோல், செங்கம் அரசு
பெண்கள் பள்ளி யில் தாமதமாக வந்த ஒரு ஆசிரியருக்கும், 'ஆப்சென்ட்'
போடப்பட்டது.