Breaking News

எப்போது வேண்டுமானாலும் இனி 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம்

பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்பு தேர்வை, எப்போது வேண்டுமானாலும், ஒவ்வொரு பாடமாக எழுதி தேர்வு பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள், உயர்கல்வி கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்பு தேர்வை, எப்போது வேண்டுமானாலும், நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் எழுதி, தேர்ச்சி அடைவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களையும் எழுத வேண்டிய அவசியமில்லை. தங்கள் வசதிக்கேற்ப, ஒவ்வொரு பாடமாக எழுதி தேர்ச்சி பெறலாம்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'மாசிவ் ஆன் - லைன் ஓபன் கோர்ஸ்' என்ற திட்டத்தின் கீழ், இந்த தேர்வை எழுதலாம். தேசிய திறந்தநிலை பள்ளி பயிற்சி மையம், இதை திட்டத்தைகண்காணிக்கும்.

இதுதொடர்பான பாடங்கள் அனைத்தையும், இணையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து படிக்கலாம். ஐந்து பாடங்களி லும் தேர்ச்சி பெற்ற பின், சான்றிதழ் அளிக்கப்படும். இவ்வாறு, அந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.