யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு
தலைவர் வேதபிரகாஷ், டில்லியில், நிருபர்களிடம் நேற்று
கூறியதாவது:தொலைதுாரக் கல்வி முறையில், எம்.பில்., - பிஎச்.டி., போன்ற
உயர்மட்ட பட்டங்களை பெறும் வகையில் படிப்புகளை வழங்குவது குறித்து,
யு.ஜி.சி., தீவிர பரிசீலனையில் ஈடுபட்டு வருகிறது. இத்திட்டம்
அமல்படுத்தப்பட்டால், 10 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.
இதுகுறித்து, யு.ஜி.சி.,யின் அடுத்த
கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு, வேதபிரகாஷ் கூறினார். தொலைதுாரக்
கல்வி முறையில், எம்.பில்., -
பிஎச்.டி., போன்ற பட்டப்படிப்புகளை வழங்க
நடவடிக்கை எடுப்பதாக, நான்கு ஆண்டுக்கு முன், யு.ஜ.சி., உறுதி
அளித்திருந்தது. அதன்படி, இத்திட்டத்தை அமல்படுத்த, யு.ஜி.சி., தீவிரம்
காட்டத் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.