Breaking News

Showing posts with label வரலாற்று சுவடுகள். Show all posts
Showing posts with label வரலாற்று சுவடுகள். Show all posts

மாணவர்கள் நினைவில்கொள்ள சில எளிய வழிகள்

Shortcuts for students

short cuts:-
*************
1. கிட்டக் குழி தோண்டி தூரக் குவி - கிட்டப் பார்வைக்கு குழியாடியும் தூரப்பார்வைக்கு குவியாடியும் பயன்படுத்த வேண்டும்.
2. ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள்
முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி -
குறிஞ்சி - மு - முருகன்
முல்லை - தி - திருமால்
மருதம்- இ - இந்திரன்
நெய்தல் - வ- வருணன்
பாலை - காளி (அ) கொற்றவை

வரலாற்று சுவடுகள் .. அனைவருக்கும் கல்வித் திட்டத்தை அப்போதே கொணடு வந்தவர் காமராஜர்


மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜ். "ஏண்ணே, இப்போ எல்லா பசங்களும் பள்ளிக்கூடத்துக்கு வர்றாங்களா?" என்று கேட்க, அதற்கு கலெக்டர்கள் "எல்லாரும் வரலை, ஓரளவுக்கு வர்றாங்க. காரணம் என்னன்னா, பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. இவனுங்களோ கோவணாண்டிகள். அவங்களோடு உட்கார கூச்சப்படுறாங்க" என்று சொன்னதும் தலைவர் யோசித்தார்.

வரலாற்று சுவடுகள் : “சென்னையைப் பற்றி ”



சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின்சார்பாக ஃப்ரன்சிஸ்டே,மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்பநாயக்கர் என்றஅக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அன்னாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டுசென்னை டே கொண்டாடப்படுகிறது.

சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்:

வரலாற்று சுவடுகள் - அலெக்ஸாண்டரின் ஆசைகள்


மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.
என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !
நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!
என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!
தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.

வராற்றுச் சுவடுகள்-அலெக்ஸôண்டர் பிளெமிங்.

இங்கிலாந்தில் பிளெமிங் என்ற விவசாயி ஒருநாள் காட்டு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு பணக்காரச் சிறுவன் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். உடனே பிளெமிங் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.
இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். பணத்தை வாங்க மறுத்த அந்த விவசாயி, தனது மகனைப் படிக்கவைக்க உதவி செய்யுமாறு வேண்டினார்.
அந்தப் பணக்காரரின் உதவியால் படித்துப் பின்னாளில் பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் அந்த விவசாயியின் மகன் அலெக்ஸôண்டர் பிளெமிங்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். அப்போது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. பிளெமிங் குடும்பத்தால் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில்.

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!


யார் இந்த மாமனிதர் ?!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

வரலாற்று சுவடுகள்-அதிசயவைக்கும் வேப்பத்துர் செங்கல்கோயில்


கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சற்று தூரம் பயணித்தால் "வேப்பத்தூர்" என்ற கிராமம் நம்மை வரவேற்கிறது, இங்க செங்கல் கோயில் ஒண்ணு இருக்காமே? என்று கேட்டதும், இன்னும் கொஞ்சம் தூரம் போய் அந்த காட்டுக்குள்ள நடங்க தம்பி என்ற பதில் வருகின்றது, சற்று தூரம் பயணித்து, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு முட்புதருக்கு நடுவே செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்று கொண்டே இருந்தால் 100 மீட்டர் தொலைவில் நம்மை வரவேற்கிறது ஒரு பிரம்மாண்டமான செங்கல் கட்டிடம். அங்கோர் வாட் கோயிலுக்கு வந்துவிட்டோமா? அல்லது இது ஏதேனும் வேற்று கிரகமா? 

இன்று (ஏப்-14) அம்பேத்கர் பிறந்தநாள்


A user's photo.
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும்,

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீர்களா…!?

Untitled-1 copyசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்…
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது…
அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே…

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது…
- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)…
- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று…
- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது…

வரலாற்று சுவடுகள் ! (Adolf Hitler ) - ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியா ?

           ஹிட்லர்


ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியா ? வரலாற்று சுவடுகள் ! (Adolf Hitler )
Adolf Hitler, ஜனவரி 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்ம
னி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால்[2] சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.

வராற்று சுவடுகள் -- 'லியொனார்டோ டாவின்சி'


 

1911-ஆம் ஆண்டு பாரிஸின் புகழ் பெற்ற லூவர் அரும்பொருளகத்திலிருந்து ஓர் ஓவியம் களவு போனது. ஓவியத்தைக் கூடவா திருடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவல்ல ஆச்சர்யம் அந்த ஓவியம் களவு போன பிறகு அது மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தைப் பார்க்கவே அரும்பொருளகத்தில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. ஓவியம் இருந்த இடத்தைப் பார்க்கவே உலகம் ஆசைப்பட்டது என்றால் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று யோசிக்கிறீர்களா? அந்த ஓவியத்தின் பெயரை சொன்னாலே உங்கள் உதடுகள் புன்னகை பூக்கும். சில காலங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த 'மகா ஓவியம்' இப்போது மீண்டும் அதே லூவர் அரும்பொருளகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது என்பது வேறு விசயம்

வரலாற்று சுவடுகள்-- உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை


உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்ற ஒரே உலக அதிசயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi).

வரலாற்று சுவடுகள்- பென்னி குயிக்



                                             பென்னி குயிக் - ஓர் அதிசய பிறவி



முல்லைப் பெரியாறு அணையை ரூ75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு கட்டும் பணி தொடங்கப் பட்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை போன்ற இடையூறுகளை சமாளித்து அணையை கட்டிக்கொண்டிருந்த பொழுது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பாதி கட்டப்பட்டிருந்த அணை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பெரிதும் மனமுடைந்தார் பென்னி குயிக். உடைந்த அணையை மீண்டும் கட்ட நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்துவிட்டது. இதனால் சிறிதும் மனம் தளராத பென்னி குயிக் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று அவரின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார்.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம் தெரியுமா?

 
 
 

Temple images

அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா?
குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர். அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி,

வரலாற்று சுவடுகள்- நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்

நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் - பிரபாவதி தேவி தம்பதிகளின் 9-வது குழந்தையாக 23-1-1897-ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்). 

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல்

பாபிலோன் தொங்கும் தோட்டம்

 

பண்டைக்கால நகரங்களுள் பாபிலோன் மிகவும் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக ஹமுராபி மன்னர் இருந்தார். இவருக்குப்பின், இவரது தளபதி நெபோபலாசர் மன்னரானார். பின்பு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவரே தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர். காசர் குன்றுப் பகுதியில் புகழ்பெற்ற அரண்மனை ஒன்றினைக் கட்டி, அருகில் தொங்கு தோட்டத்தையும் அமைத்துள்ளார். இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது.

பிரமிக்க வைக்கும் பிரமிடு



உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிட் ( Pyro  என்றால் நெருப்பு, amid என்றால் மையம்) என அழைக்கப்படும்.சியாப் பிரமிடு, எகிப்து நாட்டில் கெய்ரோ நகரத்திற்கு மேற்கே 15 கி.மீ தூரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 69 லட்சம் டன் எடையும், (2 லிருந்து 15 டன் எடை உள்ள 23 லட்சம் கற்களால்), 481 அடி உயரமும்,5 லட்சம் பேர்களால் சுமார் 50 ஆண்டு காலம், 500 மைல்களுக்கு அப்பால் உள்ள அஸ்வான் மலையிலிருந்து கொண்டு வந்து நிர்மானித்திருக்கும் முறை அவர்களது கட்டிடக்கலை, பொறியியல் விஞ்ஞான அறிவு, கணிதப் புலமை, ஆத்ம தத்துவஞானம், ஆன்மிகச்சிந்தனை, மனித நேயம், தெய்வீக சக்தி, ஆழ்ந்த வானவியல் ஆகியவை, நமது 21ம் நூற்றாண்டு மனித குலத்தின் அறிவுக்கு சவால் விடும்வகையில் அமைந்துள்ளதோடு பிரம்மிப்பையும் ஊட்டுகின்றன.