Breaking News

எந்த வங்கியிலும் கல்வி கடன் கேட்கலாம்அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க உத்தரவு

'சேவை எல்லைகளைக் கடந்து, கல்விக் கடன் கேட்டு வரும் அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.'கல்விக் கடனைப் பெற, பெற்றோர் அல்லது மாணவர் கள், கணக்கு வைத்துள்ள வங்கி கிளைகளையே அணுக வேண்டும்; வங்கிக் கணக்கு இல்லாதோர், வீட்டிற்கு அருகே உள்ள கிளையைத் தான் அணுக வேண்டும்' என, வங்கியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், 'ஒவ்வொரு வங்கி கிளைக்கும், அதற்கான சேவைப்பகுதி உள்ளது. சேவைப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு மட்டுமே, அக்கிளைகள் கடன் வழங் கும்' எனவும், வங்கியாளர் கள் கூறி வருகின்றனர்.


இந்நிலையில், வட்டார அலுவலர்களுக்கு, இந்தியன் வங்கி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'கல்விக்கடன் பெற, சேவைப் பகுதி எல்லை களை வலியுறுத்தக் கூடாது. கல்விக் கடன் கேட்டு வரும் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.இதுதொடர்பாக, கல்விக் கடன் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பிரைம் பாயின்ட் சீனிவாசன் கூறியதாவது:வங்கியாளர்கள், பெற் றோர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், தர்மபுரியில் நடந்தது. அப்போது, சேவைப் பகுதிகளைக் கூறி, கல்விக் கடன் விண்ணப்பங்களை, வங்கிக் கிளைகள் ஏற்க மறுப்பதாக புகார் கூறப்பட்டது.இதையடுத்து, அம்மாவட்ட முன்னோடி வங்கியான, இந்தியன் வங்கி மண்டல மேலாளர், 'இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதற்கிடையில், இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு, இதுபற்றி கடிதம் எழுதினேன். 

இந்தியன் வங்கி அனுப்பிய பதில் கடிதத்தில், 'சேவைப் பகுதிகளைக் கணக்கில் கொண்டு, கல்விக் கடன் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கக் கூடாது; கல்விக் கடன் கேட்டு வரும் அனைத்து விண்ணப்பங்களையும், பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்' என, தெரிவித்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.