நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி
படிக்கக்கூடிய வகையில் தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுதுவது
கட்டாயமாகிறது.இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர்
கூறியதாவது:நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி
தங்களது இஷ்டம் போல் கிறுக்க முடியாது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் கீழ், இதற்கென, அரசிதழில் அறிவிப்பை சுகாதார அமைச்சகம் மிக விரைவில் வெளியிட உள்ளது. அதன்படி, மருத்துவர்கள் இனி, நோயாளி களுக்கு தரும் மருந்து சீட்டில், தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுத வேண்டியது கட்டாயம்.
மேலும், நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதற்கு உதவும் வகையில், மருத்துவர்கள் இனி பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், மருந்தினுடைய பிராண்ட் பெயரை எழுதாமல், பொதுப் பண்பு அடிப்படையிலான பெயர்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.