பிளஸ்
1 வகுப்புகளுக்கு வரும், 30ம் தேதி வரை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன்
தயாரிப்பு பயிற்சி நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
பிளஸ் 1 வகுப்புகள், 15ம் தேதி துவங்கின. புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், அனைத்து பள்ளிகளிலும், வரும்,
30ம் தேதி வரை, பிரிட்ஜ் கோர்ஸ் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
பத்தாம் வகுப்பில் படித்த பாடங்களை மாணவர்கள், மேல்நிலையில், பிரித்து தனித்தனியாக படிக்க வேண்டும்.இதற்கு தயாராகும் வகையில், இடைநிலைக் கல்விக்கும், மேல்நிலைக் கல்விக்கும் உள்ள பாடத்திட்ட வித்தியாசங்கள் மற்றும் பழைய பாடத்திட்ட திருப்புதல் அடங்கிய, பிரிட்ஜ் கோர்ஸ் வகுப்புகள் நடத்த அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.'பிரிட்ஜ் கோர்ஸ் முடிவதற்குள், பிளஸ் 1 வகுப்புகளுக்கான அனைத்து மொழிப்பாடம் மற்றும் பாடப் புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.