தனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச
ஒதுக்கீட்டில் விண்ணப்பம் பெறுவதற்கான காலக்கெடு, ஜூன், 15 வரை
நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை
தொடர்பு அலுவலர் பிச்சை கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் படி, சிறுபான்மையற்ற
தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 2015 - 16ல், சேர்க்கை
இடங்களில், 25 சதவீதத்தை, ஏழை மற்றும் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட
பிரிவு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.