Breaking News

சென்னை பல்கலையில் இலவச 'நெட்' பயிற்சி


          சென்னை பல்கலையில், எஸ்.சி., - எஸ்.டி., ஓ.பி.சி., மாணவர்களுக்கு, 'நெட்' தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

         இதுகுறித்து, பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலை மானியக் குழுவின் நிதியுதவியுடன், சென்னை பல்கலை மாணவர்கள் ஆலோசனை மையம் (யு.எஸ்.ஏ.பி.,) சார்பில், 'நெட்' (தேசிய தகுதித்தேர்வு) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை இலவச பயிற்சி அளித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான முதல் பயிற்சி, வரும் ஜூன் ௬ம் தேதி முதல் 23ம் தேதி வரை, வார இறுதி நாட்களில் மட்டும் நடத்தப்பட உள்ளது. இந்த வகுப்பில், அனைத்து பாடங்களின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான பாடத்திட்டம் நடத்தப்படும்.

பயிற்சி வகுப்பில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின, மிகவும் பிற்படுத்தப்பட்ட (நான் - கிரீமிலேயர்) இன மாணவர்கள் கலந்து கொள்ள லாம். விண்ணப்பங்கள், வரும் 20ம் தேதியில் இருந்து வழங்கப்படும்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 29ம் திக்குள்

சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு, சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலையின் யு.எஸ்.ஏ.பி., மையத்தை அணுகலாம். அல்லது, 044 - 2539 9518 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.