'ஜூன், 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன்,
குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக்
கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து, வரும், 1ம் தேதி
பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, பள்ளிக்
கல்வித் துறையிலிருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்
அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஒரு மாதம் வரை
பள்ளி விடுமுறை நாளாக உள்ளதால், பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்கள் தேங்கி
இருக்கும். அதை சுத்தம் செய்து,
கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்ற,
நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்த கிணறுகள், பள்ளங்கள் இருந்தால் அதை
சீரமைக்க வேண்டும். பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை, பள்ளி
திறந்தவுடன் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள் ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.