Breaking News

1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'

பத்தாம் வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு பேர், தமிழ் பாடத்தில், 'சென்டம்' வாங்கியுள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட, 3.33 சதவீதம், இந்த ஆண்டு அதிகமாக பெற்று, 89.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவர்களை விட மாணவியர், 6.9 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், 19 அரசு பள்ளி மாணவ, மாணவியர் மாநில, 'ரேங்க்' பெற்றுள்ளனர். 
2012ல், 358; 2013ல் 453; 2014ல், 558 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன. தற்போது, 1,164 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டை விட, 606 பள்ளிகள் அதிகமாகும்.தமிழில், இரண்டு மாணவர்கள், 'சென்டம்' வாங்கியுள்ளனர். ஆங்கிலத்தில், 10; கணிதத்தில், 2,539; அறிவியலில், 27,157; சமூக அறிவியலில், 10,408 பேர் என, மொத்தம் 40,116 பேர், 'சென்டம்' வாங்கியுள்ளனர்