சிலநாட்களுக்கு
முன்பாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக (ந.க.எண்.016410/டி1/இ4/2015)
உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம்
செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக்காலத்திற்கு காலமுறை ஊதியம்
வழங்கப் பட்டால் ஆகும் செலவீனம் பற்றியும் கணக்கீடு செய்து அனுப்புமாறு
மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வாறு ஒரு உத்தரவு தொடக்க கல்வி துறையில் வெளியிடப் படவில்லை.
ஆனால் பளளிக்
கல்வித்துறையால் இந்த உத்தரவு வெளியிடப்பட்ட உடன் தமிழகமெங்கும் உள்ள
தொகுப்பூதிய ஆசிரியர்கள் தங்கள் மகிழ்ச்சியை முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும்
வெளிப்படுத்திக் கொண்டாடினர்....
ஏதோ அரசாணையே வெளியிடப்பட்டு விட்டது போலவும் நிலுவைத்தொகை நாளையே கையில் வழங்கப்படப் போவது போலவும் இருந்தது இந்தக் கூச்சல்..
இதில் கொடுமை என்னவென்றால்
ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் "உதவிபெறும் பள்ளிக்கு மட்டும்தான் காலமுறை
ஊதியமா! எங்களுக்கு இல்லையா? என ஆதங்கப்படுகிறார்..
அதற்குள் இன்னும் சில ஆசிரியர்கள் "அம்மா வாழ்க" என ஆரவாரம் செய்கின்றன.
என்ன மடத்தனம்!
போராட்டம் என்னவென்றால் என்ன?
போராடாமல் ஏதாவது
கிடைக்குமா? என அறியாத இவர்கள்தான் பேரணி, உண்ணாவிரதம் முடிந்த மறுநாள்
காலையிலே தர ஊதியம் மாறிவிட்டதா? என விளம்பியவர்கள்.
சரி அரசு உத்தரவு பற்றிய உண்மைக்கு வருவோம்.
2003-06 தொகுப்பூதிய
காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் தாக்கல்
செய்யப் பட்டுள்ள வழக்கு ஒன்றிற்கு எதிர்மனு தாக்கல் செய்ய சேகரிக்கப்படும்
விபரங்களே இவை.
அரசுப்பள்ளிகளுக்கு அலுவலகங்களே தயார் செய்துவிடும்.
உதவிபெறும் பள்ளிகளுக்கு நிர்வாகிகள் மூலம் பெறப்பட்டு ஆவணப் படுத்தப் படுகின்றன.
வழக்கில் பள்ளிக்கல்வி இயக்குநரே பிரதிவாதியாக சேர்க்கப் பட்டுள்ளதால் பள்ளிக்கல்வித்துறை மட்டுமே இப்பணியில் ஈடுபட்டுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில்
இப்பணி சார்பான எந்த ஒரு அசைவும் இல்லை. இவற்றை அறியாத ஆர்வக்கோளாறுகள்
ஆரவாரம் செய்வது மட்டுமல்லாமல் இப்பணத்தை எப்படி செலவு செய்வது என இப்போதே
மனக்கணக்கு போடவும் ஆரம்பித்து விட்டார்கள்.
இவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் போராட்டக்களத்தை நீர்த்துப் போகச் செய்யும்.
ஏற்கனவே இளைஞர்கள்,
பெண்களின் துடிப்பான பங்கேற்பு இல்லாமல் "ஜாக்டோ" போராட்டங்கள் எழுச்சியற்ற
நிலையில் உள்ளது. அடுத்தகட்டம் ஆறிப்போய் கிடக்கிறது.
இந்நிலையில் இதுபோன்ற போலி
சந்தோசங்களை புறந்தள்ளி முந்தைய போராட்டகால வரலாறுகளை நினைவில் கொண்டு
ஒற்றுமையாய் களம் கண்டு கோரிக்கை வெல்வோம். நாமாகவே தப்புக்கணக்கு போட்டு
அதுகிடைக்கும் இது கிடைத்துவிடும் என திருப்தி பட்டுக்கொள்வதை பார்த்து
ஆசிரியர்கள் இவ்வளவு ஏமாளிகளா என அரசும் அதிகாரிகளும் ஆச்சரியம்
அடைகிறார்கள். ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களின் இதுபோன்ற
செயல்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்