Breaking News

திருநெல்வேலி மாவட்டம்., பாளையங்கோட்டை ஆர்.சி பிஷப் பங்களா முன்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க கோரி முதுகலைப்பட்டதாரி ஆசிரியை தர்ணா

 
     நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி மரியடலக்ட்(37), முதுகலை பட்டதாரி ஆசிரியை.
    இவர் ரோமன்கத்தேலிக்க வேலைவாப்பு பிரிவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்வி தகுதியை பதிவு செய்துள்ளார். தற்போது பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுாரில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியை பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த பணிநியமனம் தொடர்பான முடிவை மேற்கொள்ள ஆர்.சி. சபை சார்பில்  12 பேரை கொண்ட கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கடந்த 11-ந் தேதியும், 27-ந் தேதியும் பணிநியமனம் தொடர்பான கூட்டத்தை நடத்தியது. இதில் பதிவு மூப்பு அடிப்படையில் தகுதி பெற்ற மரியடலக்ட்டை ஆசிரியையக நியமனம் செய்வதில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பிஷப்  ஜூடு பால்ராஜ், மறைமாவட்ட முதன்மை குரு ஜோமிக்ஸ் அடிகள் கண்பாணிப்பாளர் அல்போன்ஸ் அடிகள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மரியலட்கட் இன்று ஆர்.சி. பிஷப் பங்களா முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.