Breaking News

அரசுப்பள்ளியில் படிக்கும் ஒடிசா மாணவி; தமிழ் மொழி திறனறித் தேர்வில் வெற்றி

 ஒடிசா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட வெள்ளியங்காடு அரசுப்பள்ளி மாணவி தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

மாணவர்களே... அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்- அமைச்சர் அன்பில்!

 அடுத்த கல்வி ஆண்டில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தைக் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்

மீண்டும் புயலா..? தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.!

 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

CWSN சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி இணையவழி பயிற்சி- Tentative Answer Keys


 



*16.12.2024 திங்கள் முதல் இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம் என்று STATE EMIS TEAM தெரிவித்துள்ளது.*

பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியருக்கு மெமோ: விருதுநகர் ஆட்சியர் அதிரடி

 விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக் கோரி மாணவ, மாணவியர் போராட்டம்

 திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே திருக்கண்டலத்தில் அரசினர் உயர் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் 397 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 

ஓராண்டுக்கு முன்பே கல்லூரி படிப்பை முடிக்கலாம்: புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல்

 இளநிலை பட்டப் படிப்பை 6 மாதம் அல்லது ஓராண்டு காலம் முன்கூட்டியே முடிப்பதற்கும், தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளவும் வகை செய்யும் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.

அதிர்ச்சி... ப்ளஸ் 1 மாணவியை ரகசியமாக திருமணம் செய்த சக மாணவன்! பள்ளியில் பரபரப்பு - மாணவன் தலைமறைவு

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பிளஸ் 1 மாணவியை ரகசியமாக திருமணம் செய்த அதே வகுப்பு மாணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ஆசிரியர்கள் பணி ஓய்வு - மறுநியமன காலத்தில் CPS பிடித்தம் செய்ய வேண்டுமா? - RTI Reply

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள் வழங்குதல் - சார்ந்து.


பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் பெறப்பட்ட மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு தகவல்கள் வழங்கப்படுகிறது.
மறுநியமன காலத்தில் CPS பிடித்தம் செய்யக் கூடாது.

அரசுப்பள்ளியில் வகுப்பறையில் தூங்கிய மாணவன் - பூட்டிச்சென்ற ஆசிரியை - கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

 தர்மபுரி அருகே பள்ளி வகுப்பறையில் தூங்கி மானமனை கவனிக்காத ஆசிரியை ஒருவர் பூட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் 

அரசு பள்ளிகளுக்கு 70 வகையான தேவைகள்' முதல்வரிடம் அமைச்சர் அறிக்கை

 சென்னை, நவ. 28--தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளி களை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார்.

மாணவனின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய ஆசிரியர் .திருப்பத்தூர் பதற்றம்!! பின்னணி என்ன?

 திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சிமோட்டூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், குனிச்சு மோட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவனை தாக்கிய அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த பாப்பாபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தா.பேட்டை ஒன்றியம் ஜடமங்கலத்தை சேர்ந்த 15வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்

கால் அமுக்க சொன்ன ஆசிரியர் விவகாரம் - ஆசிரியர் மீது தவறில்லை - அந்த ஆசிரியர் மீண்டும் வேண்டும் மாணவர்கள் போராட்டம். சாலை மறியல்!

 வீரகனூா் அருகே கிழக்குராஜபாளையம் அரசுப் பள்ளியின் கணித ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவ மாணவிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதம் முன்பே கருத்துருக்கள் அனுப்ப வேண்டும்: மாநில கணக்காயர் வேண்டுகோள்

 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்​களுக்கு முன்​பாகவே ஓய்வூதிய கருத்துருக்களை அனுப்ப வேண்​டும். அப்போது​தான் பரிசீலனை செய்து விரைவாக வழங்க முடியும்’’ என மாநில கணக்​காயர் வெள்​ளி​யங்​கிரி தெரி​வித்​தார்.

ஒரே நாளில் சத்து அதிகரிக்கும என நினைத்து 15 சத்து மாத்திரையை விழுங்கிய மாணவன்.. என்னாச்சு தெரியுமா? பரபரத்த கடலூர் மாவட்ட அரசு பள்ளி

கடலூர்: சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது..இந்த சம்பவம் கடலூரில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது

பள்ளி ஆசிரியை குத்திக்கொலை ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

 தஞ்சை: தஞ்சை அருகே ஆசிரியையை குத்திக்கொலை செய்த வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனையை சேர்ந்தவர் முத்து. மீனவர். இவரது மனைவி ராணி. இவர்களது மூத்த மகள் ரமணி(26). எம்ஏ, பிஎட் பட்டதாரியான இவர், கடந்த ஜூன் மாதம் முதல் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டு வேலை பார்த்து வந்தார். 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்து வந்தார்.

பள்ளியில் புகார் கூறிய மாணவனின் சித்தப்பா மீது தாக்குதல் n தலைமையாசிரியை முன்பு பிளஸ் 2 மாணவர்கள் ஆவேசம்

மதுரை: மதுரை நகரில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 மாணவர்கள் குறித்து புகார் கூறிய சக மாணவனின் சித்தப்பாவை தலைமையாசிரியை முன்பே மாணவர்கள் கடுமையாக தாக்கினர்.

ஓய்வூதிய இயக்குனரகம் உள்ளிட்ட 3 துறைகளை மூடியது தமிழக அரசு

 சென்னை: அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் ஆகியவை, கருவூலங்கள் கணக்கு துறையுடன் இணைக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை, அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்றவற்றின் செயல் திறனை மேம்படுத்த, அத்துறைகள் சீரமைக்கப்படும் என, 2022ல் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது

மகிழ் முற்றம் விழா ஆவணம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் EMIS PORTALலில் GOOGLE DRIVE LINK யாக UPLOAD செய்யும் வழிமுறை- 2


 

ஆசிரியர் உயிரிழப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல்

 பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,



ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.


மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று உழைத்த அந்தோணி ஜெரால்ட் வகுப்பறையிலேயே தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார்.

மகிழ் முற்றம் விழா ஆவணம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் EMIS PORTALலில் GOOGLE DRIVE LINK யாக UPLOAD செய்யும் வழிமுறை


 

அரசு பள்ளியில் 2 மகள்களையும் சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி. குவியும் பாராட்டுகள்..!!

 மதுரையைச் சேர்ந்தவர் ஷெரின் சோமிதரன். இவர் ஐஏஎஸ் அதிகாரி. இவர் சென்னையில் வருவாய்த் துறையில் ஜிஎஸ்டி இணை இயக்குனராக பணிபுரிகிறார்.



இவர் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய இரு மகள்களையும் தற்போது அரசு பள்ளியில் படிக்க சேர்த்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும்: தமிழக அரசு அறிக்கை

 சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் அன்பில் மகேஷ் !!

 பள்ளிகளில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியுள்ளார்.

தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் மகேஷ் அழைப்பு!

 இல்லை, எல்லா நிலையில் இருக்கின்ற தலைமை ஆசிரியர்கள் இதுபோன்ற ஒரு அழைப்பை எனக்கு விட வேண்டும்.

பாடம் நடத்த மாற்று நபரை அனுப்பிய ஆசிரியா் இடைநீக்கம்: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக்கே வராமல் மாற்று நபரை வகுப்பெடுக்க அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது

தருமபுரி மாவட்டம், ஹரூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட கரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியா் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியா் பாலாஜி 17-ஆவது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். தொடா்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவுள்ளதாக துறை சாா்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்


டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை, விதிமுறைகள், பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை வெளியீடு*

 *🟣 

*252 பக்கங்கள் கொண்ட முழு விவரம்*


*Click here to view

வானவில் மன்றத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் பெயர்களை எவ்வாறு ஏற்றுவது?

வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது

அனைத்து விளக்கங்களுடன் வீடியோ  



போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் 'பணி 58 வயதில் டிஸ்மிஸ்'

ரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் மருதைராஜ், 58. இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள நிலையில், இவரது சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய, பெரம்பலுார் மாவட்ட உதவி தேர்வு இயக்குனர் அலுவலகத்துக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வாயிலாக அனுப்பப்பட்டன.அவற்றில், மருதைராஜ் ஆசிரியர் பட்டய படிப்பில் இரண்டு பாடத்தில் தோல்வியுற்றதும், போலி சான்றிதழ் கொடுத்து, அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் தெரிந்தது.

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - "டானா" புயல் சென்னை நிலவரம், வானிலை மையம் எச்சரிக்கை

 வானிலை மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2024 அக்டோபர் 23 ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது. 

ஆசிரியர்களுக்கு Whatsup குழு மூலம் பயிற்சி - வெளியான தகவல்!

 தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கிலக் கற்பித்தல் திறனை மேம்படுத்த, புதிய வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதிகாலை ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டால் பணம் கொட்டும் பதவி உயர்வு கிடைக்கும் வழக்குகளில் வெற்றிபெறலாம்- வட்டார கல்வி அலுவலரின் பேச்சால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

 நெல்லை: தினமும் அதிகாலை 4.30 மணிக்கே ஆன்லைன் யோகா வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என ஆசிரியர்களை கட்டாயப்படுத்தும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வட்டார கல்வி அலுவலர் ஒருவரால் ஆசிரியர்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்

தலைமை ஆசிரியா் கைது: விடுவிக்கக் கோரி மாணவா்கள் போராட்டம்

 

ஜோலாா்பேட்டை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமையாசிரியரை விடுவிக்கக் கோரி, மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிக்கல்வித்துறை அதிரடி! அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. திருக்குறளுக்கு முக்கியத்துவம் மாணவர்களுக்கு பரிசு

 தமிழக அரசுப் பள்ளிகளில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிக் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

நிறுத்தி வைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை பள்ளிகளில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை பள்ளிகளில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.



ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பி.எட் பாஸ் செய்தவருக்கு பட்டதாரி ஆசிரியர் பணி: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017 பிப்ரவரியில் வெளியிட்டது.

தற்காலிக கணினி ஆப்பரேட்டர்க்கு பாலியல் தொந்தரவு? - தலைமை ஆசிரியரை கண்டித்து முற்றுகை போராட்டம்

 திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த பெரிய மோட்டூர் பூனைக்குட்டை பள்ளம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இப் பள்ளியின் தலைமை ஆசிரியராக வாணியம்பாடி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி பணியாற்றி வருகிறார்.

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களின் அறை தரைதளத்தில் மட்டுமே இருக்க வேண்டும் - கல்வி அலுவலர் சுற்றறிக்கை

 பள்ளிகளில் தலைமையாசிரியர்களின் அறை தரைதளத்தில் மட்டுமே இருக்க வேண்டும் - இதனை அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்த கோருதல் தொடர்பாக,

ஆசிரியா் பணி நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதி மன்றம் நோட்டீஸ்

 

புது தில்லி: ஆசிரியா் நியமனத் தோ்வு கட்டாயம் என்ற நடைமுறைக்கு முன்பு சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்த ஆசிரியா்களுக்குப் பணி வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

வாசிப்பு இயக்கம் பயிற்சிக்கான , கேள்வி பதில் வீடியோ


 

2ம் கட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் (டேப்லெட்) கணினி வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது

டூவீலர்களை கழுவிய மாணவர்கள் ஆசிரியர்கள் நான்கு பேர் 'சஸ்பெண்ட்'

 பெரம்பலுார், அக். 12- 

பெரம்பலுார் மாவட்டம்

அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 136 மாணவ, மாணவியர் எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக்கு சென்றிருந்த மாணவர்கள் சிலரை,

இடமாறுதலில் சென்ற கல்வி அலுவலர்; கலங்கி அழுத ஆசிரியர்கள்; திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு பள்ளியில் பணியாற்றி விட்டு வேறு பள்ளிக்கு இடமாறுதலில் செல்கின்றபோது, அந்த பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட அந்த ஆசிரியருக்காக அழுவதும், பதிலுக்கு அந்த ஆசிரியர் கலங்குவதும், ஏன் ஆசிரியரின் இட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்திய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்

விஜய தசமியை முன்னிட்டு அரசு பள்ளிகள் திறப்பு.? தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு.!!!

 

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, விஜயதசமி அன்று அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளையும் திறந்து வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், புதிய மாணவர்களைச் சேர்க்கும் பணியை மேலும் துரிதப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

காலாண்டுத் தேர்வு திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஆய்வு செய்யவேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

 காலாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

 


2014-15ம் ஆண்டு முதல் 2024-25ம் ஆண்டு வரை அமைச்சுப் பணியாளருக்கு 2% ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் உள்ளது. 


பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


பள்ளிக்கல்வித்துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது, 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், எஞ்சிய 2 சதவீத இடங்களை தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்கள் வாயிலாகவும் நிரப்ப வேண்டும் என, 2007ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

எமிஸ் செயலியில் தகவல்கள் பதிய 1,800 பேர் நியமனம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

 

தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெறக் காரணமாக இருந்த அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா மற்றும் பணி ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.

மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் என்றால் என்ன - அதில் ஆசிரியர்கள் - மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்

 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக ரூ.2 கோடியில் ‘மகிழ் முற்றம்’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். 

பள்ளி மாணவர்களுக்கு திறன் மதிப்பீட்டு தேர்வு: முதல்கட்டமாக நாளை 07/10/2024)தொடங்கி அக்.10 வரை நடைபெறுகிறது

 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு நாளை முதல் (அக்.7) தொடங்குகிறது.

பள்ளிகளில் மாணவர் மகிழ்முற்றம்; குழு செயல்படுத்த அரசு உத்தரவு

சென்னை:தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில், மாணவர் மகிழ்முற்றம் குழுக்கள் உருவாக்க பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


7.5% கோட்டா இல்லாமல் எம்.பி.பி.எஸ் சேர்ந்த 19 தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

 குறைந்தபட்சம் 19 அரசுப் பள்ளி மாணவர்கள், 7.5% ஒதுக்கீடு இல்லாமல் எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற்றுள்ளனர் என்று தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

உலக விஞ்ஞானிகள் பட்டியலில் சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் இடம்பெற்றார்

 சிதம்பரம் அக்-3

சிதம்பரம் பள்ளிப்படையை  சேர்ந்தவர் பேராசிரியர் ஜோதி பாஸ். இவர் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.



அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் லொன் லிடிஸ் மற்றும் அவரது குழுவினர் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகளை அடையாளம் காணும் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.இதில் உலகம் முழுவதிலிருந்து இரண்டு லட்சத்திற்கு அதிகமான ஆராய்ச்சியாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. 

இந்தியாவில் இருந்து 3500 க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேராசிரியர்களுடன் பொரையார் டி பி எம் எல் கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் முனைவர் ஜோதி பாசு 2024ஆம் ஆண்டிற்கான பட்டியலில் இடம்   பெற்றுள்ளார் .

இதற்காக இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன 



நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி, களஞ்சியம் செயலி முறையை ரத்து செய்ய வேண்டும் - அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணம் தொகையை பெறுவதற்கு அரசு ஊழியர்கள் களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கருவூல ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். 



தீபாவளி சர்ப்ரைஸ்: ஊழியர்களுக்கு டபுள் போனஸ் வழங்கும் தமிழக அரசு? தீயாக பரவும் குட் நியூஸ்

 

தீபாவளி பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு இரட்டை தீபாவளி போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்- பள்ளிக் கல்வித் துறை செயலர்

சென்னை: பள்ளியின் தினசரி நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் சங்க பிரதிநிதி மரணம். 10லட்சத்தை வழங்கிய உறுப்பினர்கள். இருந்தாலும் இறந்தாலும் துணை நிற்போம் என்பதை நிருபித்த சங்கத்தின் பொதுச்செயலாளர். குவியும் பாராட்டுக்கள்


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஜான்  கென்னடி கடந்த ஆகஸ்டு 27  தேதி எதிர்பாராமல் திடீர் மரணடைந்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்.. அரசு ஆசிரியர்கள் உள்பட 15,000 பேர் ஊதியத்துக்கு காத்திருப்பு

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி உள்பட அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மத்திய, மாநில அரசுகள் சார்பில் பள்ளி கல்வித்துறைக்கு என்று தனித்தனியாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (Samagra Shiksha Scheme) என்பது மத்திய அரசு, மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் களஞ்சியம் கைபேசி செயலியில் *Festival advance apply செய்வது எப்படி?*





▪️நீங்கள் festival advance form அலுவலகத்தில் கொடுத்திருந்தாலும் mobile app-யில் apply செய்பவர்களுக்கு மட்டுமே விழா முன் பணம் கிடைக்கும் என தகவல்...

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது - கடலூர் மாவட்ட CEO

 காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.28 முதல் அக்.6 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.


ஆசிரியர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - அன்பில் மகேஸ்

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வட்டப் பேருந்து சேவையை புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிக்குகிறார்களா ஆசிரியர்கள்? தமிழக கல்வித்துறையின் அதிரடி உத்தரவால் கலக்கம்!

 இது ஆசிரியர்களின் கல்வி நிலை மற்றும் தகுதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியாக கருதப்படுகிறது

மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம்பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் போஸ்டிங்

பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 

மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் தொடர்பாக அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். 

பள்ளிக் கல்வித் துறையை கண்டித்து சென்னையில் தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 அடிப்படை காரணமின்றி மேற்கொள்ளப்படும் பணிமாறுதல் நடவடிக்கைகளை கண்டித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியில் வளைகாப்பு ரீல்ஸ்- ஆசிரியை மீதான நடவடிக்கையைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

 வேலூர் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ரீல்ஸ் வெளியிட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கயை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டம் கூட்டமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வில் பிட் அடித்த மாணவிகள் - கண்டித்த ஆசிரியர்கள் - விபரீத முடிவால் அதிர்ச்சி – நடந்தது என்ன

 கோவில்பட்டி அருகே தேர்வில் பார்த்து எழுதியதை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்து கொசு மருந்து லிக்யூட் குடித்த நான்கு மாணவிகள் – கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எமிஸ் தளத்தின் பணிச் சுமைகளால் தவிக்கும் ஆசிரியர்கள்: தொடக்க கல்வித் துறை மாற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தொடக்கப் பள்ளிகளில் அலுவல் பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆசிரியரை VRS வாங்கிட்டு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுரை - ஆசிரியை அதிர்ச்சி

 காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தாத ஆசிரியரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

அரசு பள்ளிகளில் உயர் அதிகாரிகள் தலைமையில் "திடீர் ஆய்வு" நடத்த முடிவு

 அரசு பள்ளிகளில் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

வேலூர்: பள்ளிச் சீருடையில் மாணவிக்கு வளைகாப்பு... வைரலான வீடியோ.. அரசுப்பள்ளியில் அதிர்ச்சி! ரீல்ஸ் மோகத்தில் மாணவிகள் அலப்பறை

 

வேலூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவிகள் சிலர் கும்பலாகச் சேர்ந்து பள்ளியின் மேல்தளத்துக்குச் சென்று ஒரு மாணவிக்கு `வளைகாப்பு' நிகழ்ச்சி நடத்துவதைபோல ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.



முதன்மை கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியைகள் உள்ளிருப்பு போராட்டம்

 

சிரியைகளை முதன்மைக் கல்வி அலுவலா் ஒருமையில் திட்டியதால், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைகள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மோசடி புகார் வட்டார கல்வி அலுவலர் கைது ரூ.12 கோடி மோசடி-

தருமபுரி தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி வசூலித்து மோசடி செய்த புகாரில் வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் திட்டியதால் குழந்தைகள் நல அமைப்பில் பெற்றோர் புகார் - ஆசிரியை தற்கொலை முயற்சி - தலைமையாசிரியா் "பணியிடை நீக்கம்"

 சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.


கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்தவா் தண்ணாயிரமூா்த்தி. இவா் மீது மாணவா்களிடம் பணம் வசூலித்தது, இவா் திட்டியதால் ஆசிரியை தற்கொலைக்கு முயன்றது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன. 

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் AI பாடத்திட்டம். அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்.!!!

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சூப்பரான செய்தியை தெரிவித்துள்ளார்.


அதாவது தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடத்தை முழுமையாக கொண்டு வர முயற்சிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மீன் மாதிரி துள்ள வச்சிட்டாங்க.. காலம் மாறிப்போச்சு.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுதியவர்களுக்கு ஷாக்!

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும்..

இதற்கு முன் இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த பட்டியல் தயார் செய்கிறது கல்வித்துறை

 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடை கலைதல், ஊக்க ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Update students progression activity in Udise plus portal


 

மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய மாவட்ட அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

 


அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டுமென மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளியில் கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள் - பதறிய ஆசிரியர்கள் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

 ஒரு பக்கம் போராட்டத்தில் ஆசிரியர்கள்

மறுபக்கம் 5 மாணவர்கள் செய்த சம்பவம்

ஒரு மாவட்டத்தையே உலுக்கிய பயங்கரம் 

உயிரை பிடித்து பதறிய ஆசிரியர்கள்   

மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவி - ஆசிரியர்கள் அதிர்ச்சி

 மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வருமான வரி ரீபண்ட் வரவில்லையா? போலியான உரிமைக் கோரல்களை கண்டுபிடிக்கும் RMS சிஸ்டம்!

 வருமான வரி ரீபண்ட் வரவில்லையா? போலியான உரிமைக் கோரல்களை கண்டுபிடிக்கும் RMS சிஸ்டம்!


இந்தியாவில் வசிப்பவர்கள் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்த பிறகு வருமான வரித்துறை அவற்றை சரி பார்க்கும்.

அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்

 1. பள்ளி வளாகத்தினுள் எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது.


2. அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்,  முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கூட வகுப்பறைகளில் மாணவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச அனுமதிக்க கூடாது.

IFHRMS வலைதளத்தில் LEAVE REQUEST கொடுக்கும் வழிமுறைகள்


 

ஆசிரியா்கள் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை: தமிழக அரசு

 

ஆசிரியா்களின் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் போக, மீதமுள்ள கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

 சென்னையில் அரசுப் பள்ளிக் கூடத்தில் ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் தன்னம்பிக்கை உரை என்ற பெயரில் நிகழ்த்திய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி ஒன்றில் பிரபல ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவும், அதன் நிமித்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

கலைத் திருவிழா வெற்றியாளர்களை EMIS ல் பதிவு செய்யும் முறை

கலைத் திருவிழா வெற்றியாளர்களை பதிவு செய்யும் முறை 

டிட்டோஜாக் உடன் ( 6.9.2024 ) ஆலோசனை நடத்த தொடக்கக் கல்வித்துறை அழைப்பு.

 தமிழ்நாடு தொடக்கக்  கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( டிட்டோஜாக் ) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10.09.2024 அன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் 29.09.2024,30.09.2024 , 01.10.2024 ஆகிய நாட்களில் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளமையால் . நாளை 06.09.2024 அன்று 11.00 மணி அளவில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநருடன் நடைப்பெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் .



தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

 செப்-5. சிதம்பரம் அருகே தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.


   தலைமை ஆசிரியர் திரு அசோக் விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். உதவி தலைமையாசிரியர் திரு ரவி முன்னிலை வகித்தார். ஆசிரியர் திரு ஜெயவேல் அனைவரையும் வரவேற்றார்.  விழாவில் தலைமையாசிரியர்

மாணவர்களுக்கு வழங்கிய உதவித்தொகை நிதியில் கையாடல்... பழநியில் பள்ளி ஆசிரியை கைது

 பழநி: பழநி நெய்க்காரப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் உதவித்தொகைக்கான நிதியில் கையாடல் செய்த பெண் ஆசிரியரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நெய்க்காரப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சின்னக்கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயா, ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

அக்.19-ல் தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு- செப் 5 முதல் பதிவு தொடக்கம்

கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

புயலாக கிளம்பிய "பழைய ஓய்வூதியம்".. அதிகாரிகளுக்கு போன முக்கிய உத்தரவு..தலைமைச் செயலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

 

சென்னை: திமுக அரசுக்கு எதிராக தலைமைச் செயலகத்தில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் தலைமைச் செயலகம் சங்கத்தினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்திஅரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நீண்ட வருடங்களாகப் போராடி வருகின்றனர். திமுகவும், "தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்துவோம் " என்று தங்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

வாசிப்பு இயக்கம் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

CLICK HERE TO VIEW PDF 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள், Today School Morning Prayer Activities - 03.09.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.09.2024

திருக்குறள்: 

பால்,: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:625

அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்.

பொருள் : விடாமல் மேன்மேலும் துன்பம் வந்த போதிலும் கலங்காமலி ருக்கும் ஆற்றலு டையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு்ப் போகும்.

பழமொழி :

காற்றுள்ள போதே தூற்றிக் கொள். 

 Strike while the iron is hot.

Quarterly Exam Original Question Paper and Answer Key Collection Download PDF

ALL STANDARD QUARTERLY EXAM MODEL QUESTION PAPERS 

TNSED SCHOOLS APP-ல் நுழை , நட , ஓடு , பற புத்தகங்களை Update செய்யவும்


தங்கள் வகுப்பு மாணவர்கள் முதல் பருவத்தில் ஒவ்வொருவரும் வாசிப்பு இயக்கம் சார்ந்து


 🔅 நுழை

  🔅 நட 

  🔅 ஓடு

  🔅 பற


*ஆகியவற்றில் எந்த நிலையில் உள்ளார் என்பதையும் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையும்..படிக்க விரும்பும் 3 புத்தகங்களையும் தேர்வு செய்து Update செய்ய வேண்டும்


ஆசிரியர்களுடன் மோதல் - தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்"

 


புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 390 மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை  கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களுக்காக ஒரு தலைமை ஆசிரியர், 11 ஆசிரியர்கள் உள்ளனர். தலைமை ஆசிரியராக அந்தோணி ராஜ் உள்ளார். பணியில் சேர்ந்த நாள் முதல் தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜூக்கும், ஒரு சில ஆசிரியர்களுக்கும் கல்வி தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

TETOJAC - 29-08-2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்

click here to view  

*1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற WINNER -1 🥈WINNER-2 🥉WINNER-3 மாணவர்களை தேர்வு செய்தல்.*


 🟥 *கலைத்திருவிழா -EMIS UPDATE*

*வெற்றி பெற்ற மாணவர்களின் வீடியோக்களின் Google Drive link -Copy paste செய்து SUBMIT செய்தல்* அதுகுறித்த தெளிவுரை

Old Pension scheme, NPS, CPS and UPS Pension Schemes Comparison !

 
OPS (GPF) --


  ஊதிய பிடித்தம்  இல்லை. 

 # பணி கொடை உண்டு. 

 #  பென்ஷன் 50% (30 years). 

# Family pension உண்டு

7.5% உள் ஒதுக்கீட்டின் பயன்" ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளுக்கும் கிடைத்த மருத்துவ படிப்பு..!

 


 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பாகலஹள்ளி ஊராட்சி தண்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் கொளந்தை என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.

ஒரே இடத்தில் படித்து. ஒரே இடத்தில் மருத்துவ சீட் வாங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்.!!

Video click here.



கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கனவை நனவாக்கினர்

காரைக்குடி அருகேயுள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த ரவி மற்றும் நாகராஜ் என்ற இரு மாணவர்கள் தங்கள் கிராமத்து அரசுப் பள்ளியில் ஒன்றாக படித்து, இடஒதுக்கீடு மூலம் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளனர்

அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச் சூழல் மன்றம், விநாடி-வினா மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் பள்ளி அளவிலான போட்டிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வியாண்டு அட்டவணையில் ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும்.
இந்த செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்படுவது அவசியம். இந்த போட்டிகள் அடுத்தடுத்து வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும். இதில் அதிக அளவிலான மாணவா்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.

போட்டிகள் நடைபெறுவதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இதுதொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைத்து வகை மன்ற போட்டிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்மிடம் எடுத்து நமக்கே தரும் Inverter UPSஐ ஒத்த, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)! நல் மாற்றமா? ஏமாற்றமா?

 நம்மிடம் எடுத்து நமக்கே தரும் Inverter UPSஐ ஒத்த, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)! நல் மாற்றமா? ஏமாற்றமா?

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


உச்சநீதிமன்றத்தால் அரசமைப்பின் படியான அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டு 1.1.2004ற்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பொறுத்தவரை ஊழியரிடம் எந்தவித பிடித்தமும் செய்யப்படாது, பணிக்காலத்தில் அவருக்கான கொடுபடா ஊதியமாகக் கருதப்படும் தொகையே ஊழியரின் பணி ஓய்வுத் தேதி முதல் ஓய்வூதியமாகவும், இறப்பிற்குப்பின் குடும்ப ஓய்வூதியமாகவும் வழங்கப்பட்டு வந்தது.

மத்திய அரசு செயல்படுத்த உள்ள புதிய ஒருமித்த ஓய்வூதியத் திட்டத்தில் பயன் என்ன??

 புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

_வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்!!!_*

 









_ஒருமித்த ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!!_*



*_25 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% மாத ஓய்வூதியமாக வழங்கிடும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்!!!_*


புதிய ஓய்வூதிய திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு


கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு


25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்,  ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக பெற முடியும்

*15 ஆண்டுகளாக அரியர்ஸ்: தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு

.*

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆக.30 முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம்.

தா.சோ.பேட்டை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு தேர்தல்

 சிதம்பரம்- 24

தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்,  பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான மறு கட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியர் திரு அசோக் தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திரு ஜெயவேல் ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் திரு மணிக்கண்ணன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்று தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் 

CCRT பயிற்சி - " The rich fabric of artistic and cultural heritage ஆகஸ்ட் நவம்பர் 2024 முடிய

 ஹைதராபாத் , டெல்லி , இராஜஸ்தான் , அஸ்ஸாம் - இல் புத்தாக்க பயிற்சி நடைபெறுதல் உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை அரசு / அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புதல் - தொடர்பாக பள்ளிக்  கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

click here to view proceeding