Breaking News

புயலாக கிளம்பிய "பழைய ஓய்வூதியம்".. அதிகாரிகளுக்கு போன முக்கிய உத்தரவு..தலைமைச் செயலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

 

சென்னை: திமுக அரசுக்கு எதிராக தலைமைச் செயலகத்தில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் தலைமைச் செயலகம் சங்கத்தினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்திஅரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நீண்ட வருடங்களாகப் போராடி வருகின்றனர். திமுகவும், "தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்துவோம் " என்று தங்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதி இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனை அரசின் கவனத்துக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எடுத்துச் சென்றும் எதுவும் பாசிட்டிவ்வாக நடக்கவில்லை. இந்த நிலையில் தான், 40 மாதங்களாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கண்டன முழக்கம் எழுப்பும் போராட்டத்தை தலைமைச் செயலகம் சங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று 4.9.24- அன்று மதிய உணவு இடைவேளையில் தலைமைச் செயலகத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தைநடத்துகிறார்கள் தலைமைச் செயலகப் பணியாளர்கள். இந்த கண்டன கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் குறித்த தகவல், தலைமைச் செயலாளர் முருகானந்தத்தின் கவனத்துக்கு சென்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் முயற்சிகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பென்சன் மாற்றம்: மத்திய அரசு ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து பல மாநிலங்களில் இதே திட்டத்தை மாநில அரசு ஊழியர்களுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, அதே பழைய ஓய்வூதியத்தை ஸ்டைலை கொண்ட, ஆனால் கூடுதல் பலன்களை கொண்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பென்ஷன் திட்டத்தில் பெரிய அளவில் இதன் மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் தமிழக அரசுக்கு இதன் மூலம் பெரிய செக் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் இதனால் பழைய ஓய்வூதிய திட்டம் அல்லது இதே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

அதாவது 50% சதவிகித சம்பளத்தை ஓய்வூதியமாக அளிப்பது + அகவிலைப்படி தருவது இரண்டும் சேர்த்து கொடுப்பது அவசியம் ஆகி உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு இதன் மூலம் மத்திய அரசு செக் வைத்துள்ளது.

பழசு புதுசு வேறுபாடு: தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியம்: இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.

வித்தியாசம்: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின்சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் . மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.

தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும். ஏப்ரல் 1, 2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு NPS பொருந்தும்.

அதுவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறிப்பாக குறைந்த ஊதிய விகிதத்தில் உள்ளவர்களுக்கு, அடிப்படை நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குறைந்தபட்சம் ₹10,000 மாத ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில்தான் மத்திய அரசின் இந்த மூவ் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய செக்காக அமைந்து உள்ளது.