Breaking News

உலக விஞ்ஞானிகள் பட்டியலில் சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் இடம்பெற்றார்

 சிதம்பரம் அக்-3

சிதம்பரம் பள்ளிப்படையை  சேர்ந்தவர் பேராசிரியர் ஜோதி பாஸ். இவர் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.



அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் லொன் லிடிஸ் மற்றும் அவரது குழுவினர் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகளை அடையாளம் காணும் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.இதில் உலகம் முழுவதிலிருந்து இரண்டு லட்சத்திற்கு அதிகமான ஆராய்ச்சியாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. 

இந்தியாவில் இருந்து 3500 க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேராசிரியர்களுடன் பொரையார் டி பி எம் எல் கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் முனைவர் ஜோதி பாசு 2024ஆம் ஆண்டிற்கான பட்டியலில் இடம்   பெற்றுள்ளார் .

இதற்காக இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன