Breaking News

மத்திய அரசு செயல்படுத்த உள்ள புதிய ஒருமித்த ஓய்வூதியத் திட்டத்தில் பயன் என்ன??

 புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.


மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை தொடர்பாக மேஜர் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


அதாவது, ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டம் (UPS) என்ற திட்டத்திற்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.


இந்த யுபிஎஸ் ஒய்வுதிய திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒய்வூதியம், குடும்ப பென்ஷன் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தின்படி, ஒய்வு பெறுவதற்கு முன்பாக கடைசி 12 மாதங்கள் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் சராசரியின் 50 சதவிகிதம் வழங்குவதை உறுதி செய்கிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு இது கிடைக்கும்.


குடும்ப ஓய்வூதியம் என்பது, அரசு ஊழியர் இறந்ததற்கு பின் அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்பத்திற்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த புதிய திட்டம் 2004  முதல் ஓய்வு பெற்ற, புதிய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.