Breaking News

ஆசிரியர் சங்க பிரதிநிதி மரணம். 10லட்சத்தை வழங்கிய உறுப்பினர்கள். இருந்தாலும் இறந்தாலும் துணை நிற்போம் என்பதை நிருபித்த சங்கத்தின் பொதுச்செயலாளர். குவியும் பாராட்டுக்கள்


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஜான்  கென்னடி கடந்த ஆகஸ்டு 27  தேதி எதிர்பாராமல் திடீர் மரணடைந்தார்.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருக்கின்ற வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் அந்த குடும்பத்திற்கு உதவிடும் வகையில் *பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தோழர்கள் மாநிலம் முழுவதும் இருந்தும் வழங்கிய குடும்ப நல நிதி  10 லட்சத்து 65 ஆயிரத்து 561 ரூபாய்*


அந்த நிதியினை நம் *மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இன்று மறைந்த துணை பொது செயலாளர் அவர்களது குடும்பத்தாரிடம்  வழங்கினார்*


தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் செய்யாத , இயக்கத்திற்காக உழைத்த தோழருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

➖➖➖➖➖➖➖➖

 ஊடகப்பிரிவு 

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு 

➖➖➖➖➖➖➖➖