Breaking News

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களின் அறை தரைதளத்தில் மட்டுமே இருக்க வேண்டும் - கல்வி அலுவலர் சுற்றறிக்கை

 பள்ளிகளில் தலைமையாசிரியர்களின் அறை தரைதளத்தில் மட்டுமே இருக்க வேண்டும் - இதனை அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்த கோருதல் தொடர்பாக,


பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகள் இணை ஆணையர்(கல்வி) அவர்களின் ஆய்வுகள் மேற்கொண்ட போது சில பள்ளிகளில் தலைமையாசிரியர்களின் அறைகள் பள்ளிகளின் முழுமையான செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு வசதியாக தரைதளத்தில் இல்லாமல் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் தலைமையாசிரியர்கள் அறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


எனவே பள்ளிகளின் நிர்வாக வசதிக்காகவும் முழுமையான பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும் அனைத்து சென்னைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் அறைகளும் தரைதளத்தில் இருக்க வேண்டும். தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனை அனைத்து உதவி கல்வி அலுவலர்களுக்கும் கண்காணித்து நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.