புதுடில்லி:
இந்தியாவில் உலக தரத்தில் துவக்க கல்வி அளிக்கப்பட்டு வருவதாக ஐநாவின்
கல்வி அறிவியல் அமைப்பை சேர்ந்த யுனெஸ்கோ பாராட்டு தெரிவித்துள்ளது. இது
குறித்து இவ்வமைப்பின் தலைவர் கெடாச்சூ .எங்கிடா தெரிவித்ததாவது: கடந்த
2000-2015 ஆண்டு கால கட்டங்களில் துவக்க கல்விகற்கும் பள்ளி மாணவர்களின்
இடைநிற்கும் எண்ணிக்கை 90 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. துவக்க கல்வயில்
அளிக்கப்படும் சர்வதேச தரத்தை ஏற்கனவே 47சதவீத நாடுகள் பெற்றுள்ள நிலையில்
இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அந்த நிலையை நெருங்கும் நிலையில் உள்ளன என தெரிவித்தார்