பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, முறையே வரும், 7 மற்றும், 21ல் வெளியாகிறது. ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட தேர்ச்சி சதவீதம் இலக்காக வைக்கப்பட்டு, அதை அடைய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது; இம்முறை, 95 சதவீதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெறும் பள்ளி களுக்கு, கல்வித்துறை சார்பில் பரிசு வழங்கப்படும். குறைவான தேர்ச்சி சதவீதம் பெறும் பள்ளிகளில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடைமுறை மனஉளைச்சலை ஏற்படுத்தும் என ஆசிரியர்கள் கூறினர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:கல்வித்துறை வழி நடத்தலுடன், பல்வேறு புதிய முயற்சிகளும், சிறப்பு வகுப்புகளும், கூடுதல் பயிற்சிகளும், மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதில், முழு பங்களிப்பு அளித்துள்ளோம்.தேர்வு முடிவை மாணவர்களை விட ஆசிரியர்களே எதிர்பார்த்து உள்ளனர். பள்ளிகளில் நன்றாக தேர்வு எழுதும் மாணவர்கள் கூட, சில நேரங்களில், பொதுத்தேர்வுகளில் தவற விடுகின்றனர். மாணவர் எண்ணிக்கை அடிப்படையிலும், தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப் புள்ளது. இதுதொடர்பான கல்வித்துறை விசாரணை, வீண் கவலையை ஏற்படுத்துகிறது. தேர்வு முடிவு வந்த பிறகே, நிம்மதி ஏற்படும்.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்