தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களை பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கட்டணச் செலவை கல்வி உரிமைச் சட்டப்படி மத்திய அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2013-14ம் கல்வியாண்டில், இந்த சட்டத்தின்படி, மாணவர் சேர்க்கை நடைபெற்றதில், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 25 கோடியே 13 லட்சம் ரூபாயும், 2014-15ம் ஆண்டிற்கு வழங்க வேண்டிய 71 கோடியே 57 லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தம் 97 கோடியே 4 லட்சம் ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லை என பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
கட்டணச் செலவு வழங்கப்படாததால், தனியார் பள்ளிகளில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெறுவதும் தடைபடுவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும், கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப, அனைவருக்கும் கல்வித் திட்ட விதிமுறைகளைத் திருத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்