சென்னை வளசரவாக்கத்தில் ஆசிரியை மீது அவர் பணிபுரியும் பள்ளியின் முதல்வரே ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பிற்கு ஆளான ஆசிரியையின் பெயர் மஞ்சு சிங் என்பதாகும். இவர் வளசரவாக்கத்தில் உள்ள சியோன் கிட்ஸ் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுக்கச் சென்றார். அப்போது ஆசிரியை மஞ்சு மீது திராவக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திராவகம் வீசியதாக பள்ளி முதல்வர் ஃபுளோரா, அவரது மகள் மற்றும் மகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.