சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 25ம் தேதிக்குள் வெளிவரும் என, தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய
அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத் தேர்வு மார்ச், 2ம் தேதி துவங்கியது. 10ம் வகுப்புக்கு, மார்ச்,
26ம் தேதி வரையிலும், பிளஸ் 2வுக்கு, ஏப்ரல், 20 வரையிலும் தேர்வு நடந்தது.
இதில், 24 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும், 9,450 சி.பி.எஸ்.இ., பள்ளிகளைச்
சேர்ந்த மாணவ, மாணவியர், 3,200 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வை, 30 ஆயிரம் பேரும், பிளஸ் 2 வகுப்பு
தேர்வை, 16 ஆயிரம் பேரும் எழுதினர். 10ம் வகுப்புக்கு விடைத்தாள் திருத்தம்
முடிந்து, மதிப்பெண் தொகுப்புப் பணி நடக்கிறது. பிளஸ்2வுக்கு விடைத்தாள்
திருத்தம் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிவுகள்,
10ம் வகுப்புக்கு வரும், 20ம் தேதி; பிளஸ் 2வுக்கு, 25ம் தேதி வெளியாக
வாய்ப்பு உள்ளதாக, சி.பி.எஸ்.இ., வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த
ஆண்டு பிளஸ் 2 தேர்வில், இயற்பியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால்,
தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகரிக்க வாய்ப்பில்லை என்று
கூறப்படுகிறது.