Breaking News

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்

'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.
தற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.
இதில், 2010 டிச.31 வரை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான பரிந்துரைகளை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இயக்குனரகத்திற்கு அனுப்ப உள்ளனர்.
பட்டியலில் இடம் பெறுவோர் 2016 டிச.31க்குள் பள்ளி துணை ஆய்வாளர், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு, மாவட்ட அலுவலக நடைமுறை உள்ளிட்ட 5 துறை மற்றும் சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அன்றைய தேதியில் 57 வயது பூர்த்தி அடைந்தோராக இருக்க கூடாது. குற்றவழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்க கூடாது என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த 5 தேர்வுகளில் தேர்ச்சி பெறாதோரை பரிந்துரை செய்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.