Breaking News

FLASH NEWS : 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:



அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி
வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடிகுடும்பங்களைஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.
இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின்இலக்கு.
விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்கநடவடிக்கை எடுக்கப்படும்.
பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம்ரூ.8000 கோடி வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலைஅமைக்கப்படும்.
சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கைஎடுக்கப்படும்.
* 2018, மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதிஏற்படுத்தப்படும்.
விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலராகஉள்ளது.
ரயில்வேத்துறை சுதந்திரமாக இயங்கும்
வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வழி ஏற்படும்.
விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்கு இலக்கு (கடந்தஆண்டு சுமார் 9 லட்சம் கோடி)
உலக பொருளாதார வளர்ச்சி 2017ல் 3.4 ஆக இருக்கும் எனஐஎம்எப் கணித்துள்ளது.
உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம்நிலையாக உள்ளது.
பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி இலக்கு.(கடந்தஆண்டு ரூ.5,500 கோடி)
கச்சா எண்ணெய் விலையில் நிச்சயமற்ற நிலை நிலவுவது சவாலாகஉள்ளது.
பல்லாண்டு வரி ஏய்ப்பை தடுக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கைஉதவியுள்ளது.
பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க புதிய ரூபாய் நோட்டுகள்புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம்அதிகரிக்கும்.

அமெரிக்காவால் பாதிப்பு
அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்படவாய்ப்பு உள்ளது.
இரண்டரை ஆண்டுகளில் பாஜக அரசு நிர்வாக சீர்திருத்தங்களைஎடுத்துள்ளது.
நாட்டின் முக்கியமான பொருளாதார காரணிகள் திருப்திகரமானஉள்ளன.
பணமதிப்பு நீக்கத்தின் விளைவு அடுத்த ஆண்டு தெரியவரும்.
ரயில்வே பட்ஜெட்பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டதுவரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.
கறுப்புப் பணத்திற்கு எதிரான பணமதிப்பு நீக்க நடவடிக்கைவெற்றியடைந்துள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்.
பணமதிப்பு நீக்கம் என்ற முக்கியமான முடிவை அரசுசெயல்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டியில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்துமாநிலங்களுக்கும் நன்றி.
பண  மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டிற்கு நீண்ட கால பலனளிக்கும்.
கடந்த ஓராண்டில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அரசின் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவுதெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல்36 சதவீதம் உயர்ந்துள்ளது.
இளைஞர் நலன்வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியவத்தும் கொடுத்துவருகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில்அரசு உள்ளது.
உலகப் பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில் பட்ஜெட்தாக்கல் செய்யப்படுகிறது.
நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.