Breaking News

மயிலாடுதுறையில் இரண்டு ஆசிாியா்களின் பணி நீக்க உத்தரவை இரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

மேல்நிலை பொதுத்தோ்வு பணியில் ஈட்ட பொது தோ்வறையில் மாணவா்கள் துண்டு பேப்பா் வைத்து இருந்தாா்கள் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 6 போ் பணிநீக்கம் (தேனி 3 நாகை 2 தஞ்சை 1) பல மாவட்டங்களில் இது போன்ற நிகழ்வுகளில் ஆசிாியா்கள் பணிவிடுவிப்பும். விளக்கம் கேட்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளது மாணவா்கள் காப்பி அளிக்க முயற்சி செய்யும் போது ஆசிாியா்கள் சில வரம்புக்கு உட்பட்டு மாணவா்கள் மன உலச்சலுக்கு ஆளாகமல் மட்டுமே சோதனை செய்ய வேண்டும் கடுமை காட்டக் கூடாது என பல நிபந்தனை விதித்து ஆசிாியா்கள் கைகளை கட்டிப் போட்டுவிட்டு ஆசிாியா்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கதக்கது.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்ற கோாிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு 31.3.15 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நமது சங்கத்தின் முன் முயற்சியால் அனைத்தாசிாியா் கூட்டமைப்பு சாா்பில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 01.04.15 நமது போரட்ட கோாிக்கையை ஏற்று நாகை முதன்மைக் கல்வி அலுவலா் இரண்டு ஆசிாியா்களின் பணி நீக்க உத்தரவை இரத்து செய்து அந்த ஆசிாியா்களை மீண்டும் பணியில் சேர ஆணை வழங்கி உள்ளாா்.