மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு:14 சதவீத ஆசிரியர்கள் தேர்ச்சி
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வின் (CTET-2015)முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த பிப்ரவரி 18ம் தேதி 988 மையங்களில் 96 நகரங்களில் CTET-2015 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை மொத்தம் 6.77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.
இதில் 13.53 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சியடைந்தவர்களின் விகிதம், கடந்த ஆண்டை காட்டிலும்இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.சிடிஇடி தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.